ஆண்களைப்போல் எல்லா துறையிலும் பெண்கள் சாதிக்க வேண்டும் : கோவையில் சானியாமிர்சா பேச்சு
3/4/2025 3:46:55 PM
கோவை: ஆண்களைப்போல் எல்லா துறையிலும் பெண்கள் சாதிக்கவேண்டும் என்று டென்னிஸ் வீராங்கனை சானியாமிர்ஷா கூறினார்.கோவை வர்ணம் பவுண்டேஷன் மற்றும் தனியார் நிறுவனம் சார்பில் ‘மை இந்திய மராத்தான்’ எனும் 100 சதவீதம் வாக்காளர் விழிப்புணர்வு மராத்தான் கோவை கொடிசியா மைதானத்தில் இன்று நடந்தது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக டென்னிஸ் வீராங்கனை சானியாமிர்சா கலந்துகொண்டார். அவர் பேசியதாவது: பெண்கள் உடற்பயிற்சி செய்வது அவசியம். உடற்பயிற்சி மூலம் உடல்நலம் ஆரோக்கியம் பெறும். இந்த நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் மாரத்தான் நடத்த வேண்டும். ஆண்களுக்கு இணையாக பெண்களும் அனைத்து துறையிலும் சாதிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
இதன்பின்னர் சானியாமிர்ஷா நிருபர்களிடம் கூறியதாவது:ஆஸ்திரேலியா ஓபன், யுஎஸ் ஓபன், விம்பிள்டன் உள்ளிட்ட பல தொடர்களில் வெற்றிபெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இரட்ைடயர் பிரிவில் விளையாடும் போது, சக வீரா்களை நண்பர்போல் பாவித்து, ஒத்துழைப்புடன் விளையாடினால் நிச்சயமாக வெற்றிபெற முடியும். வருடத்தில் 30 வாரம் டென்னிஸ் விளையாடி வருகிறோம். தற்போது, யுஎஸ் ஓபனில் விளையாட கவனம் செலுத்தி வருகிறேன்.இந்திய அரசு கிரிக் ெகட்டுக்கு முக்கியத்துவம் அளித்த நிலையில், தற்போது பிற விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. டென்னிஸ், தடகளப்போட்டி, காமன்வெல்த் போட்டிகளின் வெற்றிகளுக்கு பின், மக்களின் பார்வை திரும்பியுள்ளது. விளையாட்டு துறையில் வளரும் வீரர்கள் அதிகரித்து வருகின்றனர். இரட்ைடயர் பிரிவில் இந்தியாவில் சக வீராங்கனையுடன் விளையாடுவதை காலம்தான் முடிவு செய்யும். சர்வதேச அளவில் டென்னிஸ் விளையாட, வீராங்கனை இன்னும் தயாராகவில்லை. மகளிருக்கு சர்வதேச போட்டியில் விளையாட அதிக வாய்ப்புகள் உள்ளன. நான் பெண்ணாக பிறந்து விளையாட்டு துறையில் சாதித்ததை பெருமையாக கருதுகிறேன்.இவ்வாறு சானியாமிர்சா கூறினார்.