தொழில் அதிபரை மணக்கிறார் அங்கிதா
3/4/2025 2:47:19 PM
நடிகைகள் தங்களது காதலை மறைப்பது அந்த காலம், தங்கள் திருமணத்தையே ரகசியமாக நடத்துவது இந்த காலம் என கோலிவுட்டில் கமென்ட் அடிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். தமிழ் படங்களில் நடித்து பிரபலம் ஆன அசின் பிறகு இந்தி படவுலகுக்கு சென்றார். சக ஹீரோயின்களின் கவர்ச்சி போட்டிக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஒதுங்கினார். தொழில் அதிபர் ராகுல் சர்மாவுடன் ரகசிய காதல் வளர்த்து திருமணத்தையும் சஸ்பென்ஸாக நடத்தி முடித்தார். அவரைத் தொடர்ந்து ‘உயிரே’ பட நாயகி பிரீத்தி ஜிந்தாவும் தனது காதலனை சமீபத்தில் அமெரிக்காவில் ரகசியமாக மணந்தார்.
அடுத்து சத்தமில்லாமல் தனது திருமண நிச்சயதார்தத்தை நடத்தி முடித்திருக்கிறார் அங்கிதா. தமிழில் ‘லண்டன்’, ‘தக திமி தா’, ‘திரு ரங்கா’, ‘அம்பு குறி’ படங்களில் நடித்தவர். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்திருக்கிறார். இளம் ஹீரோயின்களின் வருகை இவரது வாய்ப்புகளை தட்டிப்பறித்தது. இதையடுத்து திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தார். மும்பை தொழில் அதிபர் விஷால் ஜெகதாப்புடன் அங்கிதா திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 28ம் தேதி இவர்கள் திருமணம் மும்பையில் நடக்கிறது. திருமணத்துக்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட முடிவு செய்துள்ளார் அங்கிதா.