எண்ணூரில் 4 ஆயிரம் பேருக்கு திமுக நலத்திட்ட உதவிகள்
3/4/2025 2:22:39 PM
திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டலம், 3-வது வார்டு திமுக சார்பில், நேற்று எண்ணூர், அன்னை சிவகாமி நகரில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கவுன்சிலர் கே.பி.சங்கர் தலைமை வகித்தார். கவுன்சிலர் தமிழரசன் வரவேற்றார்.
இதில் முன்னாள் அமைச்சர் கேபிபி.சாமி முன்னிலை வகித்தார். இதில் மாநில இளைஞரணி துணை செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு, 10 பேருக்கு தையல் இயந்திரம், 5 மாணவிகளுக்கு மடிகணினி, 5 பேருக்கு இஸ்திரி பெட்டி, 1000 பேருக்கு புடவை, 2500 பேருக்கு அறுசுவை உணவு உள்ளிட்ட பல லட்ச ரூபாய் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலர்கள் சொக்கலிங்கம், எம்வி.குமார், நிர்வாகி அல்லிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.