எப்போதும் மக்களோடு இருக்கும் தலைவர் ஸ்டாலின்-கி.வீரமணி
3/3/2025 3:36:40 PM
ஆலந்தூர், -சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி ஆதம்பாக்கம் அம்பேத்கர் திடலில், “வேர்வையில் வெற்றி படைக்கும் தளபதி” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நேற்றுமுன்தினம் நடந்தது. திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் வரவேற்று பேசினார். அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வாழ்த்தி பேசினார்.
கருத்தரங்கில் கி.வீரமணி பேசியதாவது:
அனைத்து மக்களின் அன்பையும், பெருமையையும், பற்றையும் முதலீடாக பெற்று கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவில், மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், 1987 முதல் இளைஞர் எழுச்சி நாளாக ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருவதாக கூறினார். இந்த மகிழ்ச்சியான நாள், இன எழுச்சி நாள். பிறந்தநாள் கொண்டாடுவது, ‘கொள்கை பரப்பு நாள்’ என்று பெரியாரே சொல்லியிருக்கிறார். எதற்காக பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என்று யோசித்து பார்க்க வேண்டும். இவர், காெணாலியில் நிற்கும் தலைவர் அல்ல, காணாமல் போகும் தலைவரும் அல்ல. எங்களை போன்று எப்போதும் மக்களோடு இருக்கும் தலைவர். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், வழக்கறிஞர் ப.தாயகம்கவி, மாவட்ட நிர்வாகிகள் பாலவாக்கம் க.சோமு, எஸ்.குணசேகரன், பாலவாக்கம் த.விஸ்வநாதன், துரைகபிலன், ப.வாசுகி, எம்.எஸ்.கே.இப்ராகிம், பகுதி செயலாளர்கள் என்.சந்திரன், பி.குணாளன், எம்.கிருஷ்ணமூர்த்தி, சு.சேகர், எஸ்.வி.ரவிச்சந்திரன், எஸ்.அரவிந்தரமேஷ், வி.இ.மதியழகன், பொது குழு உறுப்பினர்கள் கீதாஆனந்த், ஆர்.டி.பூபாலன், சைதை சம்பத், மா.அன்பரசன், எஸ்.பாஸ்கர், எம்.கே.ஏழுமலை, ஏ.எம்.வி.பிரபாகர ராஜா, கோல்டு பிரகாஷ், கே.ஆர்.ஜெகதீஸ்வரன், பெ.சாரதி, மகளிரணி அனுராதா இளங்கோ, உள்பட பலர் கலந்து கொண்டனர்.