இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

கூட்டணி குறித்து பேச மத்திய அமைச்சர் ஜவடேகர் மீண்டும் சென்னை வருகை- விஜயகாந்த்தை சந்திக்க திட்டம்?

3/3/2025 3:27:54 PM
காங்கிரசில் தொகுதி பங்கீடு குழு அமைத்தவுடன் பேச்சுவார்த்தை மு.க.ஸ்டாலின் பேட்டி அண்ணன் மீது தாக்குதல் தட்டிக்கேட்ட கம்யூனிஸ்ட் தொண்டர் குத்திக்கொலை 3 பேர் கைது: பரபரப்பு தகவல்கள்

சென்னை, -கூட்டணி குறித்து பேசுவதற்காக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்  மீண்டும் சென்னை வந்துள்ளார். அவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை மீண்டும் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜ கூட்டணி குறித்து பேசுவதற்காக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கடந்த 27, 28ம் தேதி சென்னை வந்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், இந்திய ஜனநாயக கட்சி(ஐஜேகே) தலைவர் பாரிவேந்தர், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோருடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில் சமத்துவ மக்கள் கட்சி, புதிய நீதிக்கட்சி பாஜ கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஐஜேகே மட்டும் நிபந்தனை விதித்துள்ளது. முதல்வர் ஜெயலலிதாவையும் சந்திக்க ஜவடேகர் திட்டமிட்டிருந்தார். ஆனால் அவரை சந்திக்க ஜெயலலிதா மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்திற்கு சென்று கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

ஆனால் சந்திப்புக்கு பின்னர் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அளித்த பேட்டியில், “விஜயகாந்துடனான பேச்சு பயனுள்ள வகையில் இருந்தது. விஜயகாந்திடம் பேசியது குறித்து கட்சி தலைவருக்கு தெரிவிக்கப்படும். கட்சி தலைவருடன் ஆலோசித்து மீண்டும் விஜயகாந்த்தை சந்தித்து கூட்டணி குறித்து பேசுவேன்” என்று தெரிவித்தார். அடுத்த நிமிடமே தேமுதிக தரப்பில் இருந்து ஒரு அறிக்கை வந்தது. அதில், ‘மரியாதை நிமித்தமாக பிரகாஷ் ஜவடேகர் விஜயகாந்தை சந்தித்து பேசினார்’ என்று தெரிவிக்கப்பட்டது. இது பாஜ தரப்பில் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இன்று காலை ரகசியமாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சென்னை வந்தார். அவர் வருகை தமிழக பாஜகவுக்கே ெதரியாது என்று கூறப்படுகிறது. முக்கிய தலைவர் ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்தது. விமான நிலையத்தில் இருந்து அவர் பாஜ பிரமுகர் வீட்டில் சிறிது நேரம் தங்கினார். அவர் விஜயகாந்தை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.    

மேலும் சில
  • வித்யா மந்திர் பள்ளிக்கு ஆதரவாக 15 அடி ஆக்கிரமித்து லஸ் சர்ச் சாலையில் நடைபாதை பூங்கா அமைக்கும் பணி ரத்து மக்கள் போராட்டத்தால் மாநகராட்சி பணிந்தது



  • தமிழக சட்டசபை தேர்தல் பாதுகாப்புக்கு மே 1ம் தேதி துணை ராணுவம் வருகை தலைமை தேர்தல் அதிகாரி தகவல்



  • தேமுதிக, பாமகவுடன் ஏற்கனவே பேசிவிட்டோம் முடிவை அவர்கள் தான் அறிவிக்க வேண்டும் : பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி



  • சட்டசபை தேர்தல் நேரத்தில் மது விற்பனையை அதிகரிக்க இயக்குநர் தலைமையில் இன்று ஆலோசனை: டாஸ்மாக் முறைகேடுகளை தடுக்க ஐவர் குழு



  • காங்கிரசில் தொகுதி பங்கீடு குழு அமைத்தவுடன் பேச்சுவார்த்தை மு.க.ஸ்டாலின் பேட்டி



  • வெளிநாட்டில் பறிமுதல் செய்து வங்கி கணக்கில் பிரதமர் மோடி செலுத்திய பணத்தை தரவேண்டும் : அடம் பிடித்த முதியவரால் பரபரப்பு



  • விபத்தில் சிக்கி சிகிச்சை பெறுவதால் ஆம்புலன்சில் வந்து 10ம் வகுப்பு தேர்வு எழுதினார் மாணவர்



  • பெரம்பலூரில் நடந்த விபத்தில் சென்னை போலீஸ்காரர் பலி



  • ரூ. 4.84 கோடியில் டேனிஷ் கோட்டை புதுப்பிப்பு



  • கார் மோதி 2 விவசாயிகள் பலி



Facebook

Twitter

What happened to Jay? Social psychiatric counseling
ஜெய்க்கு என்ன ஆச்சு? நண்பர்கள் மனநல ஆலோசனை
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]