கரூர் நகராட்சி கூட்டத்துக்கு நாமம் இட்டுவந்த திமுக கவுன்சிலர்கள்
3/3/2025 2:55:36 PM
கரூர், -கரூர் நகராட்சியின் சாதாரண கூட்டம், அவசரக் கூட்டம் மற்றும் சிறப்புக் கூட்டம் நடந்தது. நேற்று மாலை 4 மணியளவில் மீண்டும் அவசரக் கூட்டம் நடைபெறும் என அனைத்துக் கவுன்சிலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.இதனால் திமுக கவுன்சிலர்கள் நாராயணன், ரவிக்குமார் ஆகியோர் காதில் பூ வைத்து, நெற்றியில் நாமம் இட்டு, ஒரு கையில் பானையையும் மற்றொரு கையில் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் கரூர் நகராட்சிக்கு அறிவித்த திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை என்பதை வலியுறுத்தும் வகையில் ஊர்வலமாக ஆஸ்பத்திரி சாலை வழியாக நகராட்சி அலுவலகத்தை நோக்கி வந்தனர்.நகராட்சி நுழைவாயிலில் அவர்களை, டவுன் போலீசார் தடுத்தனர். ஆனாலும் இருவரும் கூட்டம் நடைபெறும் வளாகத்தை நோக்கி கோஷம் எழுப்பியபடி சென்றனர். அதிமுக கவுன்சிலர்கள் 10க்கும் மேற்பட்டோர், திமுக கவுன்சிலர்களுக்கு எதிராக கோஷங்கள் போட்டனர். பின்னர் அதிமுக கவுன்சிலர்கள் கலைந்து சென்றனர்.திமுக கவுன்சிலர்கள் இருவரும், நகராட்சி கூட்டம் நடைபெறும் அலுவலக வாயிலில் அமர்ந்து மீண்டும் போராட்டம் நடத்தினர். பின்னர் பானையை நகராட்சி வராண்டாவில் போட்டு உடைத்து விட்டு சென்றனர்.