இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மருத்துவம்

குடல் புண்களை குணப்படுத்தும் தக்காளி

3/3/2025 2:35:30 PM
திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு மின் கட்டணம் பாதியாக குறைப்பு ஆவின் ரூ. 7 குறையும்; ஏழைகளுக்கு இலவச செல்போன் முழு மதுவிலக்கு 3 லட்சம் பேருக்கு அரசு வேலை கல்விக் கடன் தள்ளுபடி கேட்டது, கேட்காதது; எதிர்பார்த்தது, எதிர்பாராதது எல்லாமே இருக்குது திமுக தேர்தல் அறிக்கையில் விவசாய சங்கங்கள் பாராட்டு

புற்றுநோய் வராமல் தடுக்க கூடியதும், நோய் எதிர்ப்பு சக்தி உடையதும், குடல் புண்களை ஆற்ற கூடியதும், சருமத்தை பாதுகாக்கும் தன்மை கொண்டதும், உடல் எடையை குறைக்க கூடியதுமான தக்காளியின் மருத்துவ குணங்களை பற்றி பார்ப்போம்.  தக்காளி பல்வேறு நன்மைகளை கொண்டது. இதன் பழம், காய், இலை, விதையில் மருத்துவ குணங்கள் உள்ளன. வைட்டமின் சத்துக்களை அதிகம் கொண்டது. தக்காளி முக்கியமான உணவாக பயன்படுகிறது. இதன் இலைகள் மேல்பூச்சு மருந்தாக பயன்படுகிறது.தக்காளியை பயன்படுத்தி ஆஸ்துமாவுக்கான தேனீர் தயாரிக்கலாம். தக்காளியை நீர்விடாமல் தோலுடன் அரைத்து ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதனுடன் சிறிது சுக்கு, மிளகுப்பொடி சேர்த்து ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடிப்பதால் ஆஸ்துமா பிரச்னை சரியாகும். சளி, இருமல்  இருக்கும்போது எடுத்துக்கொண்டால் அவைகள் குறைய ஆரம்பிக்கும். குழந்தைகளுக்கு கொடுக்கும்போது சிறிது தேன் சேர்த்து கொடுக்கலாம்.

சுவாச கோளாறுகளை போக்கும் தன்மை உடைய தக்காளி, பல்வேறு நோய்களுக்கு மருந்தாகிறது. புற்றுநோய் வராமல் தடுக்கும். நுரையீரல் புற்றுக்கு மருந்தாகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த கூடியது. உள் உறுப்புகளை பலப்படுத்தும். தக்காளியை பயன்படுத்தி குடலில் ஏற்படும் தொற்று, புண்களை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தக்காளியை வட்டமாக வெட்டி, புளிப்பில்லாத தயிரில் நனைத்து சாப்பிட்டு வந்தால் குடல் புண்கள் ஆறும். குடலில் ஏற்படும் புற்றுநோயை தடுக்கிறது. மார்பக புற்றுநோயை தடுக்கும் மருந்தாகிறது.

தக்காளியை பயன்படுத்தி முகப்பொலிவை அதிகப்படுத்தும் மேல்பூச்சு தயாரிக்கலாம். வருகின்ற மாதங்களில் வெயில் அதிகளவில் இருக்கும். புற ஊதா கதிர்கள் தோலில் வேர்குரு போன்ற துன்பங்களை தரும். வெயில் படுவதால் தோலில் கருமை நிறம் ஏற்படும். இந்நிலையில், முகம், கை, கால்களில் தக்காளி சாறு பூசவும். சிறிது நேரம் கழித்து கழுவினால் கருமை நிறம் மாறும். சுருக்கங்கள் மறைந்து போக்கும்.தக்காளி சாறு தினமும் ஒரு டம்ளர் குடிப்பதால் உள் உறுப்புகள் பலமாகும். உடலுக்கு புத்துணர்வு ஏற்படும். தக்காளியை பயன்படுத்தி உடல் எடையை குறைக்கும் மருந்து தயாரிக்கலாம்.ஒரு பாத்திரத்தில் சிறிது நல்லெண்ணெய் தடவவும். இதில், வெட்டி வைத்த தக்காளி துண்டுகளை வைத்து லேசாக வதக்கிய பின் மிளகுப்பொடி சேர்க்கவும். சுவைக்காக உப்பு சேர்க்கலாம். காலை உணவை குறைத்துக் கொண்டு இதை சாப்பிட்டுவர உடல் எடை குறையும்.உணவாக பயன்படுத்தி வரும் தக்காளி, புற்றுநோயை தடுக்கிறது. அமிலச்சத்தை குறைக்க கூடியது. பொட்டாசியம் அதிகளவில் இருப்பதால் இதய ஓட்டம் சீராக இருக்கும். மாரடைப்பு தவிர்க்கப்படுகிறது.

மேலும் சில
  • வயிற்றுக் கோளாறுகளை போக்கும் இளநீர்



  • உடல் உஷ்ணத்தை தணிக்கும் கிர்ணி, வெள்ளரி



  • தலைமுடியை பாதுகாக்கும் செம்பருத்தி



  • உடல் துர்நாற்றத்தை போக்கும் எலுமிச்சை, வெட்டிவேர்



  • பற்களை பலப்படுத்தும் ஆலம் விழுது



  • உடலுக்கு குளிர்ச்சி தரும் அருகம்புல்



  • மூலத்தை குணப்படுத்தும் மாசிக்காய்



  • தூக்கமின்மையை போக்கும் கத்தரிக்காய்



  • கொழுப்பை குறைக்கும் பிரண்டை



  • தொண்டை புண்ணை ஆற்றும் இஞ்சி



Facebook

Twitter

Haunted rental charge
வாடகை வசூலிக்கும் பேய்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]