ஹீரோவுடன் காதல் ரேஷ்மி ஒப்புதல்
3/2/2025 2:23:03 PM
தமிழில் ‘கண்டேன்’, ‘மாப்பிள்ளை விநாயகர்’ படங்களில் நடித்தவர் ரேஷ்மி கவுதம். தற்போது தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். சக ஹீரோயின்களின் கவர்ச்சிக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தார். போட்டியை சமாளிக்க ஆடை குறைப்பு, லிப் டு லிப், படுக்கை அறை காட்சி என எல்லாவற்றுக்கும் ஓகே சொல்லி ‘குண்டூர் டாக்கீஸ்’ தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். ஹீரோ சித்துவுடன் ரேஷ்மி நடித்த நெருக்கமான காட்சிகள் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சித்துவை ரேஷ்மி காதலிப்பதால்தான் அவருடன் தாராள கவர்ச்சியும், நெருக்கமான காட்சிகளிலும் நடித்திருக்கிறார் என கூறப்படுகிறது. இதைக்கேட்டு ரேஷ்மி கோபம் அடைவார் என்று சிலர் கூறி வந்த நிலையில், சித்துவுடன் டேட்டிங் செய்வதாக பதில் அளித்து ஷாக் அளித்திருக்கிறார். இதுபற்றி ரேஷ்மி கூறும்போது, ‘ஆம், நான் சித்துவை காதலிக்கிறேன். இதை ஒப்புக்கொள்வதில் எனக்கு அவமானம் எதுவும் இல்லை. சித்துவுடன் டேட்டிங் செய்கிறேன். அதனால்தான் எங்களுக்குள் நெருக்கமான காட்சிகள் நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி உள்ளது’என தடாலடியாக குறிப்பிட்டிருக்கிறார்.