இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மருத்துவம்

புற்றுநோயை தடுக்கும் கேரட்

3/2/2025 2:21:51 PM
திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு மின் கட்டணம் பாதியாக குறைப்பு ஆவின் ரூ. 7 குறையும்; ஏழைகளுக்கு இலவச செல்போன் முழு மதுவிலக்கு 3 லட்சம் பேருக்கு அரசு வேலை கல்விக் கடன் தள்ளுபடி கேட்டது, கேட்காதது; எதிர்பார்த்தது, எதிர்பாராதது எல்லாமே இருக்குது திமுக தேர்தல் அறிக்கையில் விவசாய சங்கங்கள் பாராட்டு

தோல், கண்களுக்கு நன்மை கொடுக்க கூடியதும், புற்றுநோயை தடுக்கவல்லதுமான கேரட் குறித்து நாம் பார்ப்போம்.  கேரட் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. காலை நேரத்தில் அரை டம்ளர் கேரட் சாறு குடித்துவர வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறும். வயிறு சுத்தமாகும். உணவு நன்கு செரிமானம் ஆகும். பூச்சிகளால் வரும் நோய்களை தடுக்கிறது.உலர்ந்த சருமம் இருப்பவர்கள் கேரட் சாறுடன் தேன் அல்லது ஆலிவ் ஆயில் சேர்த்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் சருமத்துக்கு தேவையான சத்து கிடைக்கும். கேரட்டில் உள்ள வைட்டமின் ‘ஏ’ சத்து கண்களுக்கு பலம் கொடுக்க கூடியது. விழித்திரைக்கு பலம் சேர்க்கும். கண்பார்வை நன்றாக இருக்கும். தோலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது. கோடைகாலத்தில் வெளியில் சென்று வரும்போது புறஊதா கதிர்கள் தோலை பாதிக்கிறது. தோல் கறுப்பாவதை தடுக்கிறது. தோலில் சிராய்ப்பு காயம், அரிப்பு இருந்தால் கேரட்டை பசையாக்கி தடவினால் அரிப்பு, சிவப்பு தன்மை போகும். வேர்குரு மறையும். தோலில் ஏற்படும் பிரச்னைக்கு மேல்பூச்சு மருந்தாகிறது. புண்களை ஆற்றும் வல்லமை உடையது. கேரட் கிருமிகளை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வீக்கம், வலியை கரைக்க கூடியது.

கேரட்டை பயன்படுத்தி கோடைகாலத்துக்கான ஜூஸ் தயாரிக்கலாம். ஒரு டம்ளர் கேரட் சாறுடன் சிறிது ஏலக்காய் பொடி, பனங்கற்கண்டு சேர்த்து காலையில் குடித்துவர உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு ஏற்படும்.  உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. கோடைகாலத்தில் உடலில் இருந்து வெளியேறும் நீர்ச்சத்தை சமப்படுத்தும். நாக்கு, தொண்டை, குடலில் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. கேரட்டை பயன்படுத்தி அல்சருக்கான மருந்து தயாரிக்கலாம். கேரட் துருவலுடன் உப்பு, அரை ஸ்பூன் தனியா பொடி, மல்லி, புளிப்பில்லாத தயிர் சேர்த்து கலந்து சாப்பிட்டுவர வயிற்றுப்புண் சரியாகும். வயிற்று வலி குணமாகும். நாள் முழுவதும் புத்துணர்வு ஏற்படும். எலும்புகள், பற்கள், தோல், கண் ஆகியவற்றுக்கு நன்மை தரும்.கேரட்டை மென்று சாப்பிட்டு வந்தால், வாயில் இருக்கும் கிருமிகள் போகும். பற்களுக்கு பலம் கிடைக்கிறது. ஈறுகள் கெடாமல் இருக்கும். வாய் புண்கள் சரியாகும். கேரட்டை பயன்படுத்தி ஈரலுக்கு பலம் தரும் மருந்து தயாரிக்கலாம். கேரட்டை பசையாக அரைக்கவும். இதனுடன் சிறிது மஞ்சள் சேர்க்கவும். சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விடவேண்டும். இதை வடிக்கட்டி குடித்துவர புண்கள் ஆறும். நரம்பு மண்டலங்கள் பலம் பெறும். ரத்த அணுக்களுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது ஈரல் பலம் அடைகிறது. ரத்தம் சுத்தமாகும். தேவையில்லாத நச்சுக்கள் வெளியேறும்.பித்தம் சேராமல் தடுக்கும் கேரட், மஞ்சள் காமாலை வராமல் தடுக்கிறது. புற்றுநோய் செல்களை தடுக்கிறது. தினமும் ஒரு கேரட் சாப்பிடும்போது புற்றுநோய் வராமல் தடுக்கிறது. கோடைகாலத்தில் குளிர்ச்சி தரும் உணவாகிறது. தோலுக்கு வண்ணத்தை தருகிறது.

மேலும் சில
  • வயிற்றுக் கோளாறுகளை போக்கும் இளநீர்



  • உடல் உஷ்ணத்தை தணிக்கும் கிர்ணி, வெள்ளரி



  • தலைமுடியை பாதுகாக்கும் செம்பருத்தி



  • உடல் துர்நாற்றத்தை போக்கும் எலுமிச்சை, வெட்டிவேர்



  • பற்களை பலப்படுத்தும் ஆலம் விழுது



  • உடலுக்கு குளிர்ச்சி தரும் அருகம்புல்



  • மூலத்தை குணப்படுத்தும் மாசிக்காய்



  • தூக்கமின்மையை போக்கும் கத்தரிக்காய்



  • கொழுப்பை குறைக்கும் பிரண்டை



  • தொண்டை புண்ணை ஆற்றும் இஞ்சி



Facebook

Twitter

Haunted rental charge
வாடகை வசூலிக்கும் பேய்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]