ஆசைக்கு இணங்க மறுத்த இளம்பெண் மீது ஆசிட் வீசிய வாலிபருக்கு 2 ஆண்டு சிறை
3/2/2025 2:04:28 PM
ஊட்டி, -ஆசைக்கு இணங்க மறுத்த இளம்பெண் மீது ஆசிட் வீசிய வாலிபருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டன.ஊட்டி, மஞ்சனக்கொரை பகுதியை சேர்ந்தவர் மனோகரன்(36). கேரட் கழுவும் தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். இதே பகுதியை சேர்ந்தவர் ஷீலா(26). கணவர், குழந்தைகளை பிரிந்து வாழ்ந்தார். இவரும் கேரட் கழுவும் வேலைக்கு சென்று வந்துள்ளார்.கடந்த 1.11.2025 அன்று கேரட் கழுவும் வேலைக்கு சென்ற போது, தனது ஆசைக்கு இணங்குமாறு ஷீலாவை, மனோகரன் வற்புறுத்தியுள்ளார். அதற்கு ஷீலா மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனோகரன், மறுநாள் ஷீலாவின் வீட்டிற்கு சென்று அவர் முகத்தின் மீது ஆசிட் வீசி விட்டு ஓடிவிட்டார். அவரது முகம், கண் மற்றும் உடலில் பல இடங்களில் படுகாயம் ஏற்பட்டது.
இதுபற்றிய புகாரின் போில் ஊட்டி ஜி1 போலீசார் வழக்குப்பதிவு செய்து மனோகரனை கைது செய்தனர். ஜாமீனில் வெளியே வந்த மனோகரன் வேறு ஒரு பெண்ணுடன் தலைமறைவானார். முசிறியில் பதுங்கி இருந்த மனோகரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு ஊட்டி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இளம்பெண் மீது ஆசிட் வீசிய குற்றத்துக்காக மனோகரனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்ற மாவட்ட அமர்வு நீதிபதி சர்வமங்களா தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட ஷீலாவுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.