இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

லாஸ் ஏஞ்சல்சில் கோலாகலம் ‘மேட் மேக்ஸ்’ படத்துக்கு 6 ஆஸ்கர் சிறந்த நடிகருக்கான விருதை லியோனார்டோ பெற்றார்

2/29/2016 2:38:38 PM
காங்கிரசில் தொகுதி பங்கீடு குழு அமைத்தவுடன் பேச்சுவார்த்தை மு.க.ஸ்டாலின் பேட்டி அண்ணன் மீது தாக்குதல் தட்டிக்கேட்ட கம்யூனிஸ்ட் தொண்டர் குத்திக்கொலை 3 பேர் கைது: பரபரப்பு தகவல்கள்

லாஸ் ஏஞ்சல்ஸ்: திரை துறையில் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது இன்று வழங்கப்பட்டது. ‘மேட் மேக்ஸ்: பியூரி ரோடு’ படம் 6 விருதுகளை தட்டி சென்றது. சிறந்த நடிகருக்கான விருதை ‘ரெவனன்ட்’ படத்தில் நடித்த லியார்னார்டோ டிகாப்ரியோ பெற்றார்.திரைப்பட உலகில் மிகவும் மதிப்புமிக்க விருதாக ஆஸ்கார் கருதப்படுகிறது. இவ்விருதை ஒருமுறையாவது வாங்கிவிட வேண்டுமென்பது திரைக்கலைஞர்களின் கனவாக இருக்கிறது. சிறந்த படம், நடிகர், நடிகை, ஒளிப்பதிவு, திரைக்கதை, எடிட்டிங், ஒப்பனை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில், 88வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஹாலிவுட்டில் இன்று தொடங்கியது.

நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என ஏராளமானோர் விழாவில் பங்கேற்றனர். விழாவில் கலந்துகொண்ட பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு பலத்த வரவேற்பு இருந்தது. தங்களுக்கு விருது கிடைக்கும் என கலைஞர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விருதுகள் அறிவிக்கப்பட்டன. ‘மேட் மேக்ஸ்: பியூரி ரோடு’ படத்துக்கு எடிட்டிங், ஆடை வடிவமைப்பு, சவுண்ட் எடிட்டிங், தயாரிப்பு வடிவமைப்பு, சவுண்ட் மிக்ஸிங், சிறந்த மேக்கப் என 6 விருதுகள் கிடைத்தன.‘பிரிட்ஜ் ஆப் ஸ்பைஸ்’ படத்தில் சிறப்பாக நடித்த மார்க் ரைலன்ஸ் சிறந்த துணை நடிகருக்கான விருதை தட்டி சென்றார்.

‘டேனிஸ் கேர்ள்’ படத்தில் நடித்த அலிசியா விகந்தருக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது  கிடைத்தது. ‘ஸ்பாட் லைட்’ படம் சிறந்த திரைக்கதைக்கான விருதை பெற்றுள்ளது. சிறந்த அனிமேஷன் படத்துக்கான விருது, ‘இன்சைட் அவுட்’ படத்துக்கும், சிறந்த டாக்குமென்ட்ரி படத்துக்கான விருது ‘எமி’ என்ற படத்துக்கும் கிடைத்துள்ளது. சிறந்த வெளிநாட்டு படத்துக்கான பிரிவில் ஹங்கேரியில் தயாரிக்கப்பட்ட ‘சன் ஆப் சால்’ படத்துக்கு கிடைத்துள்ளது.  

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘ரெவனன்ட்’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய லியானார்டோ டிகாப்ரியோ சிறந்த நடிருக்கான விருதை தட்டி சென்றார். ‘ரெவனன்ட்’ படத்துக்காக சிறந்த இயக்குநர் விருதை அலிஜென்ட்ரோ இன்னாரிட், சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதை இமானுவேல் லுபெஸ்கி ஆகியோர் பெற்றனர்.‘ரூம்’ படத்தில் சிறப்பாக நடித்த பிரி லார்சன் சிறந்த நடிகைக்கான விருதை தட்டி சென்றார். சிறந்த இசையமைப்பாளர் விருதை ‘தி ஹேட்புல் எயிட்’ படத்துக்கு இனியோ மொரிகான் பெற்றார். சிறந்த படத்துக்கான விருது ‘ஸ்பாட்லைட்’ படத்துக்கு வழங்கப்பட்டது.

மேலும் சில
  • ஜெய்க்கு என்ன ஆச்சு? நண்பர்கள் மனநல ஆலோசனை



  • செல்ஃபி மோகத்தால் ஏற்படும் பிரச்னையை விளக்கும் கதையில் மானஸா



  • ஒரே நேரத்தில் தனுஷ்-சிம்புவை இயக்கும் இயக்குனர்



  • போலீஸ் வேடத்துக்கு அஜீத் பட நடிகை



  • கெஸ்ட் ரோலில் கமல் நடிக்க ஒப்புக்கொண்டது எப்படி?



  • வெள்ளைக்கார நடிகைக்கு வீடு தேடிய தீபிகா



  • விஜய் சேதுபதியுடன் ஜோடி சேரவிரும்பும் ஹீரோயின்கள்



  • சிவகார்த்திகேயன் படத்துக்கு சூர்யா லொகேஷன்



  • 13 வயது சிறுமிக்கு அம்மாவான அமலா பால்



  • சமந்தாவின் புதிய கண்டிஷன்கள் தயாரிப்பாளர்கள் ஷாக்



Facebook

Twitter

What happened to Jay? Social psychiatric counseling
ஜெய்க்கு என்ன ஆச்சு? நண்பர்கள் மனநல ஆலோசனை
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]