இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மருத்துவம்

அலர்ஜியை போக்கும் அம்மான் பச்சரிசி

2/29/2016 2:20:38 PM
திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு மின் கட்டணம் பாதியாக குறைப்பு ஆவின் ரூ. 7 குறையும்; ஏழைகளுக்கு இலவச செல்போன் முழு மதுவிலக்கு 3 லட்சம் பேருக்கு அரசு வேலை கல்விக் கடன் தள்ளுபடி கேட்டது, கேட்காதது; எதிர்பார்த்தது, எதிர்பாராதது எல்லாமே இருக்குது திமுக தேர்தல் அறிக்கையில் விவசாய சங்கங்கள் பாராட்டு

தோல்நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டதும், அலர்ஜியை போக்க கூடியதும், வயிற்றுபோக்கை நிறுத்தக்கூடியதுமான அம்மான் பச்சரிசி செடியின் நன்மைகள் குறித்து பார்ப்போம். வயல்வெளி, சாலையோரங்களில் வளரக்கூடிய செடி அம்மான் பச்சரிசி. இது பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. சிவப்பு அம்மான் பச்சரிசி என்ற வகையும் உள்ளது. சிவப்பு அம்மான் பச்சரிசி எளிதில் கிடைக்காது. எனவே, அம்மான் பச்சரிசி செடியை பயன்படுத்தலாம். இதன் பூக்கள், இலைகள், வேர், தண்டு என அனைத்து மருந்தாக பயன்படுகிறது. அம்மான் பச்சரிசி செடியை பயன்படுத்தி அல்சர், குடல்புண், வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். அம்மான் பச்சரிசி செடியை அரைத்து சாறு எடுக்கவும். 10 முதல் 20 மில்லி வரை சாறு எடுத்துக் கொள்ளவும். இதில் 2 ஸ்பூன் தயிர் சேர்த்து, நீர்விட்டு கலக்கவும். இதை குடித்துவர சீதபேதி சரியாகும்.

வயிற்றுபோக்கு நின்றுபோகும். பால்வினை நோய்க்கு மருந்தாகிறது. அல்சர் குணமாகும். பல்வேறு நன்மைகளை கொண்ட அம்மான் பச்சரிசி செடி மருக்களை போக்கும் மருந்தாக பயன்படுகிறது. அம்மான் பச்சரிசி செடியின் காம்புகளை உடைத்தால் பால் போன்று வரும். இதை மருக்கள் மீது போடும்போது மருக்கள் இல்லாமல் போகும். சிவப்பு அம்மான் பச்சரிசியை பயன்படுத்தி அலர்ஜியை போக்கும் மருந்து தயாரிக்கலாம். அம்மான் பச்சரிசி செடியை சிறு துண்டுகளாக எடுத்துக்கொள்ளவும். இதனுடன் 5 அரிசி திப்பிலி சேர்த்து, ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி தேன் சேர்த்து குடித்துவர அலர்ஜி சரியாகும். அலர்ஜியால் தோலில் ஏற்படும் அரிப்பு சரியாகும்.  

கொத்துக்கொத்தாக பூக்களை பெற்றிருக்கும் சிவப்பு அம்மான் பச்சரிசி சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது. ஒவ்வாமையை போக்கும் தன்மை கொண்டது. சிவப்பு அம்மான் பச்சரி செடியை பயன்படுத்தி தோலில் ஏற்படும் அரிப்பு மற்றும் தடிப்புகளை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.அம்மான் பச்சரி செடியின் விழுது எடுத்துக்கொள்ளவும். இதனுடன் சிறிது சீரகம் சேர்க்கவும். தேவையான அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை வடிக்கடி எடுக்கவும். அலர்ஜி ஏற்படும்போது இதை பயன்படுத்தலாம்.

இந்த தைலத்தை பூசுவாதால் தோல் வியாதிகள் சரியாகும். தோலில் ஏற்படும் அரிப்பு, தடிப்பு குணமாகும். திடீரென அரிப்பு வந்து படைபோல் ஏற்படும் நோய்க்கு மருந்தாகிறது. பூச்சிக்கடியால் ஏற்படும் அரிப்பை குணமாக்கும்.  அம்மான் பச்சரிசி, சிவப்பு அம்மான் பச்சரிசி செடி ஏராளமான நன்மைகளை உள்ளடக்கியது. இந்த செடியில் இருந்து வரும் பாலை மேல்பூச்சாக பயன்படுத்துவதால் பால் உண்ணிகள் மறையும். மருக்கள் மாறிப்போகும். இதன் இலைகளை அரைத்து தயிர் சேர்த்து சாப்பிடுவதால் வெள்ளைப்போக்கு பிரச்னை தீரும். பேதி சரியாகும்.  தோல்நோய்களுக்கு அம்மான் பச்சரிசி செடி அற்புத மருந்தாக விளங்குகிறது.நன்றி: சன் டி.வி.

மேலும் சில
  • வயிற்றுக் கோளாறுகளை போக்கும் இளநீர்



  • உடல் உஷ்ணத்தை தணிக்கும் கிர்ணி, வெள்ளரி



  • தலைமுடியை பாதுகாக்கும் செம்பருத்தி



  • உடல் துர்நாற்றத்தை போக்கும் எலுமிச்சை, வெட்டிவேர்



  • பற்களை பலப்படுத்தும் ஆலம் விழுது



  • உடலுக்கு குளிர்ச்சி தரும் அருகம்புல்



  • மூலத்தை குணப்படுத்தும் மாசிக்காய்



  • தூக்கமின்மையை போக்கும் கத்தரிக்காய்



  • கொழுப்பை குறைக்கும் பிரண்டை



  • தொண்டை புண்ணை ஆற்றும் இஞ்சி



Facebook

Twitter

Haunted rental charge
வாடகை வசூலிக்கும் பேய்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]