இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

ஆன்மீகம்

ஸ்ரீ ஞான சுந்தர விநாயகர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

2/4/2025 2:17:29 PM
ஸ்டாலின், ஜெ. சென்னையில் போட்டி போட்டு பிரசாரம் தேர்தல் களம் சூடு பிடித்தது திமுக தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு அசாமில் இறுதி கட்ட தேர்தல் மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்வு

திருவள்ளூர்: பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடியில் உள்ள ஸ்ரீ சித்திபுத்தி உடனுறை ஸ்ரீ ஞான சுந்தர விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடியில் புதிதாக சித்தி புத்தி ஞானசுந்தர விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், திரிபுரசுந்தரி சமேத வைதீஸ்வரர், தட்சணாமூர்த்தி, பிரம்மா, விஷ்ணு துர்க்கை, நர்த்தன கணபதி, நந்திகேஸ்வரர், சண்டிகேஸ்வரர், கால பைரவர், பார்வதி அம்மன், கல்யாண நவகிரகம், பஞ்சபாண்டவர் திரவுபதியம்மன், ஐயப்பன், வெங்கடேச பெருமாள், ஹயக்கிரீவர், தன்வந்திரி, கருடாழ்வார், ஆஞ்சநேயர், சாய்பாபா மற்றும் 92 அடி உயர ராஜகோபுரம் கட்டப்பட்டு உள்ளது. கோயில் மகா கும்பாபிஷேகம் நேற்று காலை நடைபெற்றது.

இதையொட்டி காலை 6.30 மணிக்கு நான்காம் கால யாக பூஜை நடந்தது. அதை தொடர்ந்து 10 மணிக்கு புனித நீர் ராஜகோபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. மாலை 5 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், இரவு 7 மணிக்கு உற்சவர் விநாயகர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு திருவீதியுலா நடந்தது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

விழாவில், அமைச்சர் பி.வி.ரமணா, எம்எல்ஏக்கள் மணிமாறன், வாலாஜாபாத் கணேசன், நகர மன்ற தலைவர் பூவை ஜி.ஆர்.திருமலை, துணை தலைவர் பூவை எம்.ரவிக்குமார், ஒன்றிய கவுன்சிலர் பூவை எம்.ஜெயக்குமார், கவுன்சிலர்கள் புகழேந்தி, நெல்சன் மற்றும் சந்திரசேகரன், ஜெ.சுதாகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி பூவை எம்.ஞானம், நிர்மலா ஞானம், பி.பிரபாகர், காஞ்சனா, ஜி.முரளிகுமார், பிரியா, டாக்டர் ஜி.பிரேம்குமார், டாக்டர் சிவரஞ்சனி ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும் சில
  • தொட்டியம் மதுரகாளியம்மன் கோயில் திருவிழா தேர்களை தோளில் தூக்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்



  • செங்குன்றத்தில் அங்காளஈஸ்வரி கோயிலில் தீமிதி திருவிழா



  • திருவள்ளூர் சிவ- விஷ்ணு ஆலயத்தில் ஸ்ரீஜலநாராயணி தாயார் கும்பாபிஷேகம்



  • கொண்டத்து காளியம்மன் குண்டம் ஆயிரக்கணக்கானோர் தீ மிதித்தனர்



  • மயிலாப்பூர் பெயர் எப்படி வந்தது?



  • மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் கோலாகலமாக கொண்டாடப்படும் அறுபத்து மூவர் திருவிழா



  • மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அறுபத்து மூவர் திருவிழா கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு



  • கோடிநீர்வாழி அம்மனுக்கு 108 சங்காபிஷேகம் விழா



  • சிவன்மலை கோயிலில் ஆண்டவன் உத்தரவில் உப்பு ‘ஏதாவது மாற்றம் வருமாம்’



  • நள்ளிரவு சுடுகாட்டில் மயான கொள்ளை எரியும் பிணத்தை சூலாயுதத்தால் குத்தி எடுத்து சாப்பிட்ட மருளாளி திருச்சி அங்காளபரமேஸ்வரி கோயிலில் மகா சிவராத்திரி விழா



Facebook

Twitter

ஹீரோவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய போலீஸ்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]