இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ஐப்பசி பவுர்ணமியையொட்டி கங்கைகொண்டசோழபுரத்தில் நாளை அன்னாபிஷேகம்

10/26/2015 3:00:39 PM
மாநகராட்சி மன்ற கூட்டத்தில் மேயரை கண்டித்து திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு சேலத்தில் நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம் திமுக ஆட்சிக்கு வந்ததும் கோரிக்கை நிறைவேற்றப்படும் : கட்டுமான தொழிலாளர்களிடம் மு.க.ஸ்டாலின் உறுதி

ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் நாளை அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது.அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ராஜராஜசோழன் மகன் ராஜேந்திர சோழனால் கங்கை நதி வரை போராடி வெற்றிபெற்ற சின்னமாக கட்டப்பட்டது.  இக்கோயிலில் உள்ள சிவலிங்கம் 60 அடி சுற்றளவும், பதிமூன்றரை அடி உயரமும் கொண்டதாகும், ஆண்டுதோறும் ஐப்பசி பவுர்ணமி அன்று 100 மூட்டை அரிசியால் சாதம் சமைத்து காலை 11 மணிமுதல் கோயிலில் உள்ள பிரகதீஸ்வரர் லிங்கத்திற்கு அபிஷேகம் துவங்கி, மாலை 6 மணியளவில் தீபாராதனை செய்யப்படும். லிங்கத்தின் மேல் சாத்தப்படும் ஒவ்வொரு சாதமும் லிங்கத்தின் தன்மையை பெறுகிறது.

இதனால் ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான சிவலிங்கத்தை தரிசிக்கும் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த ஆண்டு நாளை பவுர்ணமியில் அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது. இதைமுன்னிட்டு வரும் நேற்று கணக்கவிநாயகருக்கு மகாபிஷேகம் நடந்தது.இன்று காலை 9 மணிக்கு பிரகதீஸ்வரர், அம்பாள், மகிஷாசுரமர்த்தினி, சுப்ரமணியர் மற்றும் நவகிரகங்கள் ஆகியவற்றுக்கு மகா அபிஷேகமும், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். நாளை மாலை 6 மணிக்கு அன்னாபிஷேகம், தீபாராதனை, இரவு 9 மணிக்கு அன்னம் பிரசாதம் வழங்கல் நடக்கிறது.தொடர்ந்து 28ம் தேதி மூலவருக்கு ருத்ராபிஷேகம் நடைபெற உள்ளது. அன்னாபிஷேகம் முடிந்து தீபாராதனை முடிந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கபடும். மீதமுள்ள சாதம் ஏரிகுளங்களில் மீன்களுக்கு உணவாக அளிக்க படும். விழாவுக்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை மற்றும் காஞ்சி சங்கரமட விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

மேலும் சில
  • அரசுக்கு சொந்தமான இடத்தில் ரூ. 10 கோடி ஆக்கிரமிப்பு வீடுகள், கடைகள் அகற்றம் : துரைப்பாக்கத்தில் பரபரப்பு



  • ஓய்வு பெற்ற டிரைவரின் சலுகை பண விவகாரம் : போக்குவரத்து துறைக்கு ஐகோர்ட் உத்தரவு



  • விலைவாசி உயர்வை எதிர்த்து ஜெயலலிதா வீடு முன் மறியல் திமுக ஆர்ப்பாட்டத்தில் ஜெ.அன்பழகன் எச்சரிக்கை



  • தமிழக மீனவர்கள் 34 பேர் கைது முதல்வர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் : ராமதாஸ் வலியுறுத்தல்



  • போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வாசன் வலியுறுத்தல்



  • வண்டலூர் பூங்காவில் காட்டுமாடு 2 கன்று ஈன்றது



  • டெங்கு ஜுரம் உயிரிழப்பு அதிகரிப்பு அமைச்சர்கள் தலைமையில் அவசர ஆலோசனை



  • மாநகராட்சி மன்ற கூட்டத்தில் மேயரை கண்டித்து திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு



  • மறைந்த காலாட்படை வீரர்களுக்கு அஞ்சலி



  • ரயில் மீது கல் வீசினால் 10 ஆண்டுகள் சிறை



Facebook

Twitter

அமெரிக்காவில் அனுஷ்காவுக்கு ஆபரேஷன்?
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]