இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

தாம்பரம் - பீச் வழித்தடத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத ரயில் நிலையங்கள் சுத்தமில்லாத பிளாட்பாரங்கள்; போதிய கழிவறை, குடிநீர் கிடையாது

10/17/2015 12:43:09 PM
மக்களை மறந்துவிட்டு நடத்தும் ஆட்சியை அனுமதிக்கக் கூடாது திமுக தலைவர் கருணாநிதி பேச்சு அதிமுக ஆட்சியின் அவலத்தால் தமிழகம் 20 ஆண்டு பின்னோக்கி சென்றுவிட்டது : பண்ருட்டியில் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை தாம்பரத்தில் இருந்துகடற்கரை வரை 18 ரயில் நிலையங்கள் உள்ளன. அவற்றில் ஒருசில ரயில் நிலையங்கள் மட்டுமே முறையாக பராமரிக்கப்படுகின்றன.மற்ற ரயில் நிலைய பிளாட்பாரங்களில் குப்பைகள் தேங்கியுள்ளது. இரவு நேரங்களில் சமூகவிரோத செயல்கள் நடக்கின்றன. பாதுகாப்புக்குரயில்வே போலீசார் இருந்தும், அவர்கள் சரிவர பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதில்லை என்று பொதுமக்கள்குற்றம்சாட்டுகின்றனர்.தாம்பரம் ரயில் நிலையம்: தாம்பரம் ரயில் நிலையத்தில்6க்கும் மேற்பட்ட பிளாட்பாரங்கள் உள்ளன. இவை அனைத்தும் முறையாகப் பராமரிக்கப்படுகின்றன.எனினும், இங்கு போதுமான கழிவறைகள் இல்லை என பயணிகள்குற்றம்சாட்டுகின்றனர். ரயில் நிலையத்துக்குபொருட்களை ஏற்றி, இறக்கும் சரக்கு வாகனங்களும், ஷேர் ஆட்டோக்களும் ஆக்கிரமித்து இருப்பதால்,ரயிலைப் பிடிக்க அவசரமாக செல்லும் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். பிளாட்பாரத்தில்இருக்கும் குடிநீர் குழாயில் எப்போதாவதுதான் தண்ணீர் வருகிறது.

இரவு நேரங்களில் பிளாட்பாரங்களைபிச்சைக்காரர்கள் தங்குமிடங்களாகப் பயன்படுத்தி வருகின்றனர்.சானடோரியம்: இங்கு ஆங்காங்கே நடைபாதை வியாபாரிகள் காய்கறி, பழம் போன்ற பொருட்களை விற்கின்றனர். இரவு நேரங்களில்பெரும்பாலான மின்விளக்குகள் எரிவதில்லை. பிளாட்பாரத்தை ஒட்டி நடைபாதை மேம்பாலம் இல்லாததால், பயணிகள் தண்டவாளத்தையேகடந்து செல்கின்றனர்.குரோம்பேட்டை: ரயில் நிலையத்தைஒட்டியுள்ள எம்ஐடி காம்பவுண்ட் சாலையில் போதுமான தெருவிளக்குகள் எரியாததால், இரவு நேரங்களில்பயணிகள் செல்ல அச்சப்படுகின்றனர். பல்லாவரம்: தாம்பரம் டூ பீச் வழித்தடத்தில், இந்த ரயில் நிலையமே மிக மோசமாக இருப்பதாக பயணிகள் கூறுகின்றனர். பிளாட்பாரத்தில் தேங்கும் குப்பைகள் உடனுக்குடன் அகற்றப்படுவது இல்லை. மின்விளக்குகள் சரிவர எரிவதில்லை. அடிக்கடி வழிப்பறி கொள்ளைகள் நடைபெறுகின்றன.

திரிசூலம்: மின்சார ரயில்கள் மூலம் சர்வதேச விமான நிலையத்துக்கு செல்பவர்களே இங்கு அதிகம் வருகின்றனர். இந்நிலையில், இரவுநேரங்களில் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. ஒரே ஒரு போலீஸ்காரர்மட்டும் பணிகளை மேற்கொள்கிறார். இங்கு குடிநீர், கழிவறை வசதி கிடையாது. மீனம்பாக்கம்: இங்கு தேங்கியுள்ள குப்பைகளை உடனுக்குடன் அகற்றப்படுவதில்லை என்று பயணிகள் கூறுகின்றனர்.இரவு நேரங்களில் பிச்சைக்காரர்களின் தங்குமிடமாக உள்ளது.  பழவந்தாங்கல்:  இங்குள்ள பிளாட்பாரங்களில்ஆங்காங்கே பள்ளங்கள் காணப்படுகின்றன. ரயில்வே நடை மேம்பாலம் செங்குத்தாக காணப்படுவதால்,அனைத்து பயணிகளும் தண்டவாளத்தையே கடந்து செல்கின்றனர்.பரங்கிமலை:சென்னை நகரையும் ஆதம்பாக்கம்உள்ளிட்ட பல்வேறு புறநகர் பகுதிகளை இணைக்கும் முக்கிய கேந்திரமாக உள்ளது. இந்த ரயில் நிலையத்தில்முறையான சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை. கழிவறைகள் சுத்தம் செய்யப்படாமல்,உடைந்த நிலையில் காணப்படுகிறது. குடிநீர் குழாயில் தண்ணீர் வருவதே இல்லை.


கிண்டி: இந்த ரயில் நிலையத்தையொட்டி,மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால், பிளாட்பாரங்கள் புழுதியாக உள்ளது. கழிவறை, குடிநீர் வசதிகள் இல்லை.நடைமேம்பாலம்செங்குத்தாக உள்ளதால், ஏராளமான பயணிகள் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடக்கின்றனர். சைதாப்பேட்டை: பிளாட்பாரத்தில்ஏராளமான பள்ளங்கள் உள்ளன. நடைபாதையில் வியாபாரிகள் பொருட்களை விற்கின்றனர். இரவு நேரங்களில் குறைவான மின் விளக்குகளேஎரிகின்றன. மாம்பலம்: இங்குள்ள கழிவறையின் கதவுகள்உடைந்து, சுத்தப்படுத்தப்படாமல் காணப்படுகிறது. குடிநீர் குழாயிலும் எப்போதாவதுதான்தண்ணீர் வருகிறது. கோடம்பாக்கம்: இந்த ரயில் நிலையத்தில்எங்கு பார்த்தாலும் குப்பைகள் காணப்படுகின்றன. கழிவறைகள் பூட்டியேஉள்ளன. குடிநீர் குழாயிலும் தண்ணீர் வருவதில்லை. மின்விளக்குகள் சரிவர எரிவதில்லை. 3 டிக்கெட்  கவுன்டர்கள் இருந்தும், ஒன்றில் மட்டுமேடிக்கெட் தருகின்றனர். நுங்கம்பாக்கம்: இங்குள்ள வாகன நிறுத்துமிடம் முறையாகபராமரிக்கப்படாததால், சாலைகளிலேயே வாகனங்களை நிறுத்திவிட்டு செல்ல வேண்டியுள்ளது என்று பயணிகள்குற்றம்சாட்டுகின்றனர்.

சேத்துப்பட்டு: இந்த ரயில்நிலையத்தில்எந்நேரமும் பிக்பாக்கெட் அடிப்பவர்களும் வழிப்பறி கொள்ளையர்களும் அதிகம் உள்ளனர். இரவு நேரங்களில் பிச்சைக்காரர்களும் அப்பகுதியை சேர்ந்த ஒருசிலரும் ரயில்நிலைய பிளாட்பாரத்தில்படுத்து தூங்குகின்றனர். இங்குள்ள குறைவான கழிவறைமற்றும் தண்ணீர் வசதிகளை அவர்களே பயன்படுத்தி வருகின்றனர். இங்கு ரயில்வே போலீஸ் பாதுகாப்புஇல்லை என்று கூறுகின்றனர். எழும்பூர்: வெளியூர் செல்லும் பயணிகள்இங்கு அதிகம் வந்து செல்வதால், எந்நேரமும் பரபரப்பாக இருக்கிறது. எனினும், மின்சாரரயில் பகுதியில் இருந்து வெளியூர் செல்லும் ரயில்களைப் பிடிக்க நீண்ட தூரம் நடை மேம்பாலத்தில்செல்ல வேண்டியுள்ளது. இங்கு எஸ்கலேட்டர் வசதி செயல்படவில்லை. பூங்கா: சென்ட்ரல் ரயில் நிலையம்,ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் வடசென்னை பகுதிகளுக்கு செல்லும் மக்கள்அதிகமாக இருப்பதால், இந்த ரயில் நிலையம் எந்நேரமும் பரபரப்பாக காணப்படும். எனினும்,இங்கு போதுமான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது இல்லை. பிச்சைக்காரர்கள்,வழிப்பறிக் கொள்ளையர்கள் நிறைந்துள்ளனர். இரவு நேரங்களில் பல்வேறு சமூகவிரோத செயல்கள்நடைபெறுகின்றன. இங்கு பாதுகாப்பு பணிக்கு ரயில்வே போலீசார் வருவதே இல்லை என்று பயணிகள்குற்றம் சாட்டுகின்றனர்.

கோட்டை: இந்த ரயில் நிலையம் அருகேதலைமை செயலகம், ரிசர்வ் வங்கி உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ளன. பறக்கும்ரயில் நிலையமும் அருகிலேயே இருப்பதால், பகல் நேரங்களில் மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும். இந்நிலையில், இங்குள்ள நடைமேம்பாலத்தின்பல்வேறு இடங்கள் உடைந்து இருப்பதால், மக்கள் பயத்துடனே சென்று வருகின்றனர்.இதைத் தவிர்ப்பதற்காக ஆபத்தான நிலையில் தண்டவாளங்களை கடந்து,காம்பவுண்ட் சுவர் ஏறிக் குதித்து செல்கின்றனர். போதிய கழிவறை மற்றும் குடிநீர் வசதிகள் இல்லை.    இரவு நேரத்தில் குறைவான மின்வெளிச்சத்தில் மக்கள் பயத்துடனே செல்கின்றனர். பீச் ரயில் நிலையம்: இந்த ரயில் நிலையத்தை ஒட்டிபர்மா பஜார், சென்னை துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள், வங்கிகள் உள்ளன

.இதனால் எந்நேரமும் மக்கள் நடமாட்டம் காணப்படும்.இங்கு சேரும் குப்பைகள்அடிக்கடி அகற்றப்படுவதில்லை. பிளாட்பாரங்களில் ஆங்காங்கே பள்ளங்கள் காணப்படுகின்றன.இரவு நேரங்களில் நடைபாதை வியாபாரிகளும் பிச்சைக்காரர்களும் பிளாட்பாரத்தை ஆக்கிரமித்துவிடுகின்றனர். இதனால் இங்கு நடக்கவே மிகவும் சிரமமாக உள்ளது என்று பொதுமக்கள் கூறுகின்றனர். அனைத்து ரயில்நிலையங்களிலும் ஒருசிலவற்றை தவிர, மற்றவற்றில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்படுவதுஇல்லை. கழிவறைகள் உபயோகப்படுத்த முடியாத அளவுக்கு உள்ளன. குடிநீர்குழாய்கள் இருந்தும், அவற்றில் தண்ணீர் வருவதில்லை. மின்விளக்குகளும் சரிவர எரிவது கிடையாது. சமூகவிரோத செயல்கள்நடைபெற்று வருகின்றன. நடைமேம்பாலங்கள் செங்குத்தாகவும், உடைந்தநிலையில் காணப்படுவதால் நடுத்தர வயதினரும் முதியவர்களும் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. இதுபோன்ற பிரச்னைகளை தீர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் சில
  • தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்த எதிர்ப்பு டோக்கன் ஆபீசை மீனவர்கள் முற்றுகை : ராமேஸ்வரத்தில் பரபரப்பு



  • ‘‘முதல்வர் இருக்காங்க.. தயவு செய்துபோங்கள்’’டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட குடிமகன்களிடம் போலீசார் கெஞ்சல்



  • மக்களை மறந்துவிட்டு நடத்தும் ஆட்சியை அனுமதிக்கக் கூடாது திமுக தலைவர் கருணாநிதி பேச்சு



  • மத்திய, மாநில அரசுகள் விலைவாசியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: திருமாவளவன் அறிக்கை



  • திண்டுக்கல் அருகே மின்னல் தாக்கி கல்லூரி மாணவர் 2 பேர் பலி



  • அரசு பணியின் போது பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 3 லட்சம் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு



  • தப்பி ஓடிய மாவோயிஸ்ட்களை பிடிக்க கடும் நடவடிக்கை ஜி.கே.வாசன் வலியுறுத்தல்



  • அதிமுக யாருடன் கூட்டணி? டாக்டர் ராமதாஸ் பரபரப்பு பேச்சு



  • சீன பட்டாசுகளை விற்கக் கூடாது விக்கிரமராஜா வேண்டுகோள்



  • ஈேராடு அருகே பரபரப்பு காதல் திருமணம் செய்த தம்பதி காரில் கடத்தல் : 12 பேருக்கு போலீசார் வலைவீச்சு



Facebook

Twitter

முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]