மைனர் பெண்ணிடம் உல்லாசம் திருமணத்துக்கு மறுத்த மதபோதகர் கைது
10/15/2015 2:34:41 PM
திருப்பத்தூர்: திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி மைனர் பெண்ணிடம் உல்லாசம் இருந்துவிட்டு திருமணத்துக்கு மறுத்த மத போதகரை போலீசார் கைது செய்தனர்.வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 17வயது பெண். இவர் மிட்டூரில் உள்ள அரசு பெண்கள் பள்ளி விடுதியில் தங்கிருந்து பிளஸ்1 படித்து வந்தார். மாணவி மிட்டூரில் உள்ள ஒரு சர்ச்சுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.அப்போது அந்த மாணவியுடன் அந்த சர்ச்சில் மத போதகராக இருக்கும் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அப்துல்லாபுரத்தை சேர்ந்த விஜயகுமார் (எ) தீபக்குமார்( 47) என்பவர் நட்புடன் பழகி வந்தாராம். மேலும் அந்த பெண்ணை அவர் சென்னை உள்பட பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றதாக தெரிகிறது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அப்பெண்ணின் தாய் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் தனது படிப்பை நிறுத்தி விட்டு தாயை கவனிக்க ஊருக்கு சென்று விட்டாராம். மேலும் தனது தாய்க்கு ஜெபம் செய்ய வரும்படி மதபோதகர் விஜயகுமாரை அப்பெண் அழைத்துள்ளார்.அதன்படி விஜயகுமார் அடிக்கடி அவரது வீட்டுக்கு சென்று ஜெபம் செய்து வந்தாராம். அப்போது, நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என விஜயகுமார் ஆசைவார்த்தை கூறியுள்ளார்.இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி மைனர்பெண்ணை சென்னைக்கு அழைத்துச்சென்ற விஜயகுமார், அங்கு பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மைனர்பெண் விஜயகுமாரிடம் வற்புறுத்தியுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த விஜயகுமார், இதுகுறித்து வெளியே சொன்னால் உன்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாக தெரிகிறது.இதனால் அதிர்ச்சியடைந்த மைனர்பெண், திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீசில் நேற்று புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்து மதபோதகர் விஜயகுமாரை கைது செய்தார். பின்னர் அவரை திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.