இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு மதுரை இன்ஸ்பெக்டர் உட்பட 25 பேர் கைதாகின்றனர்

10/8/2025 3:43:20 PM
‘நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம்’ திமுக ஆட்சி மலர்ந்ததும் மீனவர் பிரச்னைக்கு தீர்வு: பவானிசாகரில் மு.க.ஸ்டாலின் பேச்சு சீன ஓபன் டென்னிஸ்; ஜோகோவிச் அபாரம்

சிவகங்கை: சிவகங்கையைச் சேர்ந்த சிறுமி, பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக  மதுரை இன்ஸ்பெக்டர் உட்பட 25 பேர் வரை கைதாகின்றனர். நேற்று  எஸ்ஐ உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சிவகங்கையைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி (47). இவர் சிஆர்பிஎப் போலீசாக இருந்து டிஸ்மிஸ் ஆனவர். இவரது  மகன் கார்த்திக் (20). மகள் சுகந்தி (17 பெயர் மாற்றப்பட்டுள்ளது). கோயம்புத்தூர் சென்ற சுகந்தி, அங்கு தனது அத்தை செல்வியிடம், தன்னை பல ஆண்டுகளாக  தந்தை மற்றும் அண்ணன் உள்பட பலர் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார். இது குறித்து சிவகங்கை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில்  செல்வி புகார் செய்தார். இதன் அடிப்படையில் சுகந்தியின் தந்தையும், அண்ணனும் கடந்த ஜூனில் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் வின்சென்ட் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், ஸ்ரீசுகந்தியை பல  ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். போலீஸ் எஸ்.ஐ முதல் ஏடிஜிபி வரை உயர் அலுவலர்கள் பலர் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர். 10  ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கொடுமை நடந்துள்ளது. எனவே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என கூறியிருந்தார்.இந்த வழக்கை விசாரித்த  ஐகோர்ட், தமிழக தலைமைச் செயலர், போலீஸ் டிஜிபி,  சிவகங்கை மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதனிடையே,  சுகந்தியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் சிவகங்கை டவுன் போலீஸ் ஸ்டேஷன் எஸ்ஐ சங்கர் (55), சுரேஷ்குமார் (32), செந்தில்குமார் (36), அரவிந்த் (25)  ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதில் சுரேஷ்குமார், செந்தில்குமார் ஆகியோர் சுகந்தியின் மாமன் முறை உறவினர்கள். அரவிந்த், சுகந்தியின் அண்ணன் கார்த்தியின் நண்பர். இந்த வழக்கில்  சுகந்தி வீட்டின் அருகே வசித்த கண்டக்டர் உள்ளிட்ட மேலும் பலர் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. பாலியல் தொடர்பான தகவல் வெளியானவுடன்  எஸ்.எஸ்.ஐ சங்கரை, தேவகோட்டைக்கு டிரான்ஸ்பர் செய்து நேற்று முன்தினம் எஸ்.பி துரை உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.மேலும், சிறுமியை பலாத்காரம்  செய்த பிரச்னையில் மதுரை இன்ஸ்பெக்டர், சிவகங்கை அரசு பஸ் கண்டக்டருக்கு தொடர்பு உள்ளதாக தெரிகிறது. இவர்களோடு 25 பேர் வரை கைதாக  வாய்ப்புள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.



 

மேலும் சில
  • திருச்சியில் ரூ.10 லட்சம் கொள்ளையில் இன்ஜினியர் உள்பட 5 பேர் கைது



  • திமுக கவுன்சிலர் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது



  • குரோம்பேட்டையில் கணவருடன் தகராறில் பெண் தற்கொலை



  • பெங்களூர் விடுதியில் வைத்து மிரட்டல்: தொழிலதிபர்களிடம் கோடிக்கணக்கில் பறிப்பு : பெண் உள்பட 5 பேர் கைது



  • கல்பாக்கம் அருகே அதிகாலை சோகம் பைக் மீது அரசு பஸ் மோதி புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் பலி : டிரைவர் கைது; மணமகள் வீட்டார் அதிர்ச்சி



  • சிறுமியை சீரழித்த செக்ஸ் ஏடிஜிபி பற்றி எஸ்.ஐ.யிடம் விசாரணை: பலாத்கார வழக்கு சூடு பிடிக்கிறது



  • அம்பத்தூர் அருகே மர்ம நபர்கள் கைவரிசை



  • டாஸ்மாக் கடை முன்பு நின்ற மச்சானை தட்டி கேட்டவருக்கு சரமாரி பீர் பாட்டில் குத்து



  • வண்ணாரப்பேட்டையில் பரபரப்பு மின்வாரிய ஊழியர் வீடு உடைத்து 12 பவுன் நகை, பைக் கொள்ளை: மேலும் 2 இடத்தில் கைவரிசை



  • கணவனின் குடிப்பழக்கத்தால் வந்த சோதனை பாவாடை நாடாவால் கழுத்தை இறுக்கி இரண்டு குழந்தைகள் கொடூர கொலை: தற்கொலைக்கு முயன்ற தாய்க்கு தீவிர சிகிச்சை



Facebook

Twitter

சம்பளம் உயர்த்தினால் தப்பு என்ன? ரகுல் ப்ரீத் பதிலடி
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]