பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா கடிதம்
10/8/2025 3:40:36 PM
சென்னை: மருத்துவ படிப்புகளுக்கு தேசிய அளவிலான தகுதி நுழைவு தேர்வு நடத்தக் கூடாது என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: மருத்துவ மற்றும் பல் மருத்துவ இளங்கலை, முதுகலை படிப்புகான தேசிய அளவிலான தகுதி நுழைவுத் தேர்வு அறிமுகம் செய்யவதை தமிழக அரசு எதிர்க்கிறது. அரசின் நிலைப்பாடு குறித்து ஏற்கனவே தங்களுக்கு கடிதங்கள் எழுதியுள்ளேன். நுழைவுத்தேர்வு குறித்த பெரும்பான்மையான வழக்குகளில் தமிழகத்தின் நிலைப்பாடு எதிரொலித்துள்ளது.தகுதி நுழைவுத் தேர்வினால் ஏழை, கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே, தகுதி நுழைவுத் தேர்வு நடத்த கூடாது. நடத்த முயற்சி செய்தால் தமிழகத்தின் உரிமைகள் பாதிக்கப்படும். மாநிலத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பான கொள்கைகள் பாதிக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.