இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

கள்ளக்காதலுக்கு இடையூறு 2 குழந்தைகளை கொன்ற தாய், பாட்டிக்கு சிறை பெத்த மனம் கல்லு?

10/8/2025 2:41:40 PM
பஞ்சாபில் விவசாயிகள் ரயில் மறியல் 12ம் தேதி வரை போராட்டம் நீட்டிப்பு: போக்குவரத்து பாதிப்பால் பயணிகள் அவதி லாரியில் ஏற்றுவதில் கூலி தகராறு ரூ1.75 கோடி நெல் மூட்டைகள் சேதம்: அதிகாரிகள் மெத்தனம்

ஈரோடு:கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக 2 குழந்தைகளை விஷம் கொடுத்து கொன்ற தாய், பாட்டி சிறையில் அடைக்கப்பட்டனர்.ஈரோடு மாவட்டம், காலிங்கராயன்பாளையம் மணக்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் என்கிற ஈஸ்வரன் (29). சென்னையில், தோல் தொழிற்சாலை ஒன்றில் சூபர்வைசராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரஞ்சிதா (25). இவர்களுக்கு ரிதீஷ் (5), அன்பரசு (2) ஆகிய 2 மகன்கள்.ஈஸ்வரனுக்கும், ரஞ்சிதாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். ரஞ்சிதா, தாய் சிவகாமியுடன், சித்தோடு கொங்கம்பாளையத்தில் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி மாலை குழந்தைகள் இருவரும் படுக்கையில் பிணமாக கிடந்தனர். குழந்தைகளுக்கு, சளி பிடித்திருந்ததால், சளி மாத்திரையை தேங்காய் எண்ணெய் கலந்த சாதத்துடன் ஊட்டி விட்டதாகவும், குழந்தைகள் எப்படி இறந்தார்கள் என்பது தெரியவில்லை என்று ரஞ்சிதா கூறினார்.குழந்தைகள் சாவில் மர்மம் உள்ளது என்று தந்தை ஈஸ்வரன், சித்தோடு போலீசில் புகார் செய்தார்.

 போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். குழந்தைகள் அருந்திய உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருந்தது பிரேத பரிசோதனை தொடர்பான ஆய்வில் தெரியவந்தது.இதையடுத்து ரஞ்சிதாவிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது கள்ளக்காதலுக்கு குழந்தைகள் இடையூறாக இருந்ததால் உணவில் பூச்சிக்கொல்லி மருந்து வைத்து கொலை செய்ததையும், அவருக்கு உடந்தையாக அவரது தாயார் சிவகாமி (45) இருந்ததாகவும் அவர் ஒப்புக் கொண்டார். இதைத்தொடர்ந்து ரஞ்சிதாவும், சிவகாமியையும் போலீசார் கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் சில
  • திருச்சியில் ரூ.10 லட்சம் கொள்ளையில் இன்ஜினியர் உள்பட 5 பேர் கைது



  • திமுக கவுன்சிலர் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது



  • குரோம்பேட்டையில் கணவருடன் தகராறில் பெண் தற்கொலை



  • பெங்களூர் விடுதியில் வைத்து மிரட்டல்: தொழிலதிபர்களிடம் கோடிக்கணக்கில் பறிப்பு : பெண் உள்பட 5 பேர் கைது



  • கல்பாக்கம் அருகே அதிகாலை சோகம் பைக் மீது அரசு பஸ் மோதி புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் பலி : டிரைவர் கைது; மணமகள் வீட்டார் அதிர்ச்சி



  • சிறுமியை சீரழித்த செக்ஸ் ஏடிஜிபி பற்றி எஸ்.ஐ.யிடம் விசாரணை: பலாத்கார வழக்கு சூடு பிடிக்கிறது



  • அம்பத்தூர் அருகே மர்ம நபர்கள் கைவரிசை



  • டாஸ்மாக் கடை முன்பு நின்ற மச்சானை தட்டி கேட்டவருக்கு சரமாரி பீர் பாட்டில் குத்து



  • வண்ணாரப்பேட்டையில் பரபரப்பு மின்வாரிய ஊழியர் வீடு உடைத்து 12 பவுன் நகை, பைக் கொள்ளை: மேலும் 2 இடத்தில் கைவரிசை



  • கணவனின் குடிப்பழக்கத்தால் வந்த சோதனை பாவாடை நாடாவால் கழுத்தை இறுக்கி இரண்டு குழந்தைகள் கொடூர கொலை: தற்கொலைக்கு முயன்ற தாய்க்கு தீவிர சிகிச்சை



Facebook

Twitter

சம்பளம் உயர்த்தினால் தப்பு என்ன? ரகுல் ப்ரீத் பதிலடி
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]