இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

லாலு பிரசாத்திடம் கருப்பு பணம் பாஜ தலைவர் சுஷில் மோடி குற்றச்சாட்டு

10/8/2025 2:38:23 PM
பஞ்சாபில் விவசாயிகள் ரயில் மறியல் 12ம் தேதி வரை போராட்டம் நீட்டிப்பு: போக்குவரத்து பாதிப்பால் பயணிகள் அவதி லாரியில் ஏற்றுவதில் கூலி தகராறு ரூ1.75 கோடி நெல் மூட்டைகள் சேதம்: அதிகாரிகள் மெத்தனம்

பாட்னா: பீகார் மாநில முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவிடம் கருப்பு பணம் இருப்பதாகவும், அதை வைத்து பால் பண்ணை நடத்தி வருவதாகவும் பாஜ மூத்த தலைவர் சுஷில் குமார் மோடி குற்றம் சாட்டியுள்ளார். பீகார் மாநிலத்தில் வரும் 12ம் தேதி தொடங்கி நவம்பர் 5ம் தேதி வரை 5 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. முதல் கட்ட தேர்தலுக்கு இன்னும் 4 தினங்களே உள்ள நிலையில் அங்கு தலைவர்களின் பிரசாரம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. பாஜ சார்பில் பிரதமர் நரேந்திரமோடி இன்று 4 பிரசாரக் கூட்டங்களில் பேச இருக்கிறார். இதற்கிடையில் தலைவர்கள் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டிக் கொள்ளும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. நரமாமிசம் சாப்பிடுபவர் என பாஜ தலைவர் அமித்ஷாவை ஆர்ஜேடி தலைவர் லாலு தாக்கி பேசியிருந்தார். லாலுவை கொள்ளைக்காரன் என அமித்ஷா விமர்சித்தார். தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறி தனிப்பட்ட முறையில் அடுத்தவர்களை தாக்கி பேசிய குற்றத்துக்காக இருவர் மீதும் வழக்கு பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
 
இந்நிலையில் லாலு பிரசாத் யாதவிடம் கருப்பு பணம் இருப்பதாக பீகார் மாநில முன்னாள் துணை முதல்வரும், பாஜ மூத்த தலைவருமான சுஷில் குமார் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், பசுக்களின் மீது மிகுந்த பாசம் இருப்பதாகவும், சொந்தமாக 400 பசுக்களை வளர்த்து வருவதாகவும் லாலு கூறியிருக்கிறார். பசுக்களின் மீது அவருக்கு உண்மையில் பாசம் இல்லை. மாட்டு தீவன ஊழல் வழக்கில் கிடைத்த கருப்பு பணத்தை மறைக்க பசுக்களை வைத்து பால் பண்ணை நடத்துகிறார் என குற்றம் சாட்டியுள்ளார். மற்றொரு டுவிட்டர் செய்தியில், இந்துக்கள் புனிதாக கருதும் பசுவின் மீது உண்மையாக மரியாதை இருக்கும் பட்சத்தில் மாட்டுக்கறிக்கு ஆதரவாக அவர் பேசியது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் சில
  • பஞ்சாபில் விவசாயிகள் ரயில் மறியல் 12ம் தேதி வரை போராட்டம் நீட்டிப்பு: போக்குவரத்து பாதிப்பால் பயணிகள் அவதி



  • பார்வை இல்லாமலே இசையில் சாதித்தவர்: இசை அமைப்பாளர் ரவீந்திர ஜெயின் மரணம்



  • ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்த உ.பி. வாலிபர் நாடு திரும்ப விருப்பம்



  • ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் மோடி கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்: லாலு உச்சகட்ட தாக்குதல்



  • டெல்லியில் நிலநடுக்கம்



  • குஜராத்தில் புகழ் பெற்ற சோம்நாத் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் : பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்



  • சிகரெட் விற்பதற்குத் தடை



  • இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்வு : பீகாரில் வெற்றி வாய்ப்பு யாருக்கு? புதிய சர்வேயில் பரபரப்பு தகவல்கள்



  • கர்நாடகாவில் அரசு வேலை வாய்ப்பில் பெண்களுக்கு 33%



  • நாக்கில் சைத்தான் குடியிருக்கிறது என பேசியதற்கு பீகார் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்: மோடி மீது லாலு பாய்ச்சல்



Facebook

Twitter

சம்பளம் உயர்த்தினால் தப்பு என்ன? ரகுல் ப்ரீத் பதிலடி
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]