இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

சீன ஓபன் டென்னிஸ் கால் இறுதியில் ராட்வான்ஸ்கா

10/8/2025 2:35:18 PM
பஞ்சாபில் விவசாயிகள் ரயில் மறியல் 12ம் தேதி வரை போராட்டம் நீட்டிப்பு: போக்குவரத்து பாதிப்பால் பயணிகள் அவதி லாரியில் ஏற்றுவதில் கூலி தகராறு ரூ1.75 கோடி நெல் மூட்டைகள் சேதம்: அதிகாரிகள் மெத்தனம்

பெய்ஜிங்: சீன ஓபன் டென்னிஸ் காலிறுதிக்கு போலந்து வீராங்கனை அக்னீஸ்கா ராட்வான்ஸ்கா முன்னேறியுள்ளார்.பெய்ஜிங்கில் நடந்து வரும் சீன ஓபன் டென்னிஸில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று மூன்றாம் சுற்று ஆட்டங்கள் நடந்தன. போலந்து வீராங்கனை அக்னீஸ்கா ராட்வான்ஸ்கா, அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீய்சுடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் முதல் செட்டில் அதிரடியாக ஆடிய ராட்வான்ஸ்கா, மேடிசன் கீய்சின் சர்வீஸ் கேமை ஒரு முறை முறியடித்தார். காயத்தால் தடுமாறிய மேடிசன் கீய்ஸ், ராட்வான்ஸ்காவின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் தடுமாறினார். முதல் செட்டை அக்னீஸ்கா ராட்வான்ஸ்கா 6-3 என்ற கேம் கணக்கில் வென்றார். இரண்டாவது செட்டில் விளையாடினால் காயத்தின் தன்மை அதிகரிக்கும் என்று உணர்ந்த மேடிசன் கீய்ஸ், ஆட்டத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

 இதனால், அக்னீஸ்கா ராட்வான்ஸ்கா காலிறுதிக்கு முன்னேறினார்.சுவிஸ் வீராங்கனை டிமியா பாக்சின்ஸ்கி, ஸ்பெயின் வீராங்கனை கார்லா சுவாரஸ் நவரோவுடன் மூன்றாம் சுற்றில் மோதினார். இதில் முதல் செட்டை வென்ற பாக்சின்ஸ்கி, அடுத்த செட்டை இழந்தார். மூன்றாம் செட்டில் சுதாரித்து ஆடி பாக்சின்ஸ்கி  வெற்றியை தன் வசப்படுத்தினார். டிமியா பாக்சின்ஸ்கி 6-4, 4-6, 7-5 என்ற செட்களில் வெற்றி பெற்று காலிறுதிக்குத் தகுதி பெற்றார். ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலீக் கெர்பர், இத்தாலி வீராங்கனை சாரா எர்ரானி ஆகியோரும் காலிறுதிக்கு முன்னேறி உள்ளனர். ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் 7-6(3), 6-4 என நேர் செட்களில் கனடா வீரர் போஸ்பிசிலை வீழ்த்தி மூன்றாம் சுற்றுக்கு தகுதி பெற்றார். ஸ்பெயின் வீரர் டேவிட் பெரர், அமெரிக்காவின் ஜாக் சோக், சீன வீரர் லூ ஆகியோரும் மூன்றாம் சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

மேலும் சில
  • கான்பூரில் நாளை முதல் ஒன்டே தென் ஆப்பிரிக்க சவாலை எதிர்கொள்ளுமா இந்தியா?



  • சீன ஓபன் டென்னிஸ்; ஜோகோவிச் அபாரம்



  • சீன ஓபன் டென்னிஸ்; காலிறுதியில் ஜோகோவிச்



  • சட்டையால் ஈர்க்கப்பட்டனர் விவிஎஸ் லட்சுமணனை கலாய்த்த டோனி & கோ இந்திய டிரெஸ்சிங் ரூமில் ருசிகரம்



  • வரி ஏய்ப்பு வழக்கில் மெஸ்ஸிக்கு சிறை?



  • இங்கிலாந்துக்கு யாசிர் ஷா அச்சுறுத்தல் மிஸ்பா உல் ஹக் எச்சரிக்கை



  • அமெரிக்க ஓபன் தோல்வியில் இருந்து மீள மிதவைகளின் துணையுடன் ஆற்றில் நீந்தி மகிழ்ந்த செரீனா



  • கட்டாக் சம்பவம், படேல்கள் போராட்டம் தண்ணீர் பாட்டில்களுக்கு தடை; அடையாள அட்டை அவசியம் : இந்தியா-தெ.ஆ. ஒரு நாள் தொடருக்கு பலத்த பாதுகாப்பு



  • 5 ஆண்டுக்கு பின் பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் சோயிப் மாலிக்



  • சீன ஓபன் டென்னிஸ் வீனஸ் அதிர்ச்சி தோல்வி



Facebook

Twitter

சம்பளம் உயர்த்தினால் தப்பு என்ன? ரகுல் ப்ரீத் பதிலடி
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]