மீராஜாஸ்மினை இயக்க மாட்டேன் டைரக்டர் தடாலடி
10/8/2025 2:33:49 PM
இயக்குனர், ஹீரோ, ஹீரோயினுக்கிடையேயான புரிதல் முக்கியம். இல்லாவிட்டால் படம் உருவாவதில் சிக்கலாகி விடுகிறது. மீரா ஜாஸ்மினுடன் இணைந்து இனி பணியாற்ற மாட்டேன் என அறிவித்திருக்கிறார் மலையாள பட இயக்குனர் கமல். இருவரும் ‘கிராம்போன்’ மலையாள படத்தில் பணியாற்றியதிலிருந்தே பிரச்னை தொடங்கியது. அதை பெரிதுபடுத்தாமல் அடுத்தடுத்து 2 படங்களில் இணைந்து பணியாற்றியபோது மீண்டும் பிரச்னை தலை தூக்கியது. இறுதியாக பணியாற்றிய ‘மின்னாமின்னி கூட்டம்’ படப்பிடிப்பு இறுதிநாளன்று இனி மீரா ஜாஸ்மினுடன் இணைந்து பணியாற்ற மாட்டேன். இதுதான் அவருடன் பணியாற்றும் கடைசிபடம் என்று இயக்குனர் கமல் அறிவித்தார்.இந்நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த இயக்குனர் கமலிடம் மீரா மீதான கோபம் தீர்ந்ததா? அவரை வைத்து மீண்டும் படம் இயக்குவீர்களா என்றபோது உர்ரானார். மீராவுடனான மோதல்பற்றி விளக்கியதுடன் இனி அவருடன் பணியாற்றப்போவதில்லை என்றார்.