பிரதாப் போத்தன் பட சர்ச்சை ஜெயராம் மகன் மறுப்பு மம்மூட்டி மகன் ரெடி
10/8/2025 2:33:23 PM
1979ல் அழியாத கோலங்கள் தொடங்கி 2014ல் வெளியான பூஜை படம் வரை பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் பிரதாப் போத்தன். தற்போது மலையாள படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். நடிப்பதுடன், படங்களும் இயக்குகிறார். தான் இயக்கும் புதிய படம் மூலம் நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸை ஹீரோவாக அறிமுகம் செய்துவைக்க கால்ஷீட் கேட்டார். அதை ஏற்க மறுத்த ெஜயராம், பெரிய இயக்குனர் ஒருவர் மூலமாகவே காளிதாஸை அறிமுகப்படுத்தவுள்ளதாக கூறினார். இதனால் கோபம் அடைந்த பிரதாப், ஜெயராமை தாக்கி வெளியிட்ட கருத்து சர்ச்சைக்குள்ளானது.இந்நிலையில் பிரதாப்பிற்கு கைகொடுத்திருக்கிறார் மம்மூட்டி மகன் துல்கர் சல்மான். அவரது இயக்கத்தில் நடிக்க கால்ஷீட் ஒதுக்கி தந்திருக்கிறார். இதுகுறித்து குறிப்பிட்டுள்ள பிரதாப்,‘ஓ காதல் கண்மணி உள்ளிட்ட படங்களில் துல்கரின் நடிப்பு என்னை கவர்ந்தது. திறமையான நடிகர் என்பதை நிரூபித்திருக்கிறார். எனவேதான் அவரை என் படத்தில் ஹீரோவாக நடிக்க வைக்க ஆசைப்பட்டேன்’ என்றார்.