ரஜினியால் கிடைத்த வாய்ப்பு ராதிகா ஆப்தே பூரிப்பு
10/8/2025 2:32:34 PM
அழகு ராஜா, வெற்றி செல்வன் என விரல்விட்டு எண்ணக்கூடிய படங்களில் மட்டுமே நடித்துக்கொண்டிருந்தார் ராதிகா ஆப்தே. இந்தியில் நடிக்க சென்றபிறகு நடிப்பு பாணியை மாற்றினார். கிளாமராக நடிப்பது, கிளுகிளுப்பாக போஸ் தருவது, ஆண், பெண் உறவுபற்றி வெளிப்படையாக கருத்து சொல்வது என ஸ்டன்ட் அடித்தார். அது ஒர்க் அவுட் ஆனது. அவர் மீது இயக்குனர்கள் கவனம் திரும்பியது. தமிழில் யாரும் எதிர்பாராத வகையில் ‘கபாலி’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆனார்.அடுத்தடுத்து தமிழ் படங்கள் வரும் என்று காத்திருக்காமல் மீண்டும் இந்தி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக் கிறார். பவன் கிரிப்லானி இயக்குகிறார். ராதிகா ஆப்தேவை தேர்வு செய்தது குறித்து இயக்குனர் கூறும்போது,’இந்த படத்துக்கு ராதிகா ஆப்தேதான் பொருத்தமாக இருப்பார் என்பதை முதலிலேயே முடிவு செய்திருந்தேன். இதில் வரும் கதாபாத்திரத்தை உள்வாங்கி நடிக்கும் ஆற்றல் அவருக்கு உண்டு. விரைவில் இப்படத்துக்கு தலைப்பு வைக்கப்பட உள்ளதுடன் அடுத்த 10 நாட்களில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது’ என்றார். ரஜினியுடன் நடிப்பதால்தான் இந்த இந்தி பட வாய்ப்பு தனக்கு கிடைத்ததாக பூரிப்புடன் சொல்கிறார் ராதிகா ஆப்தே.