அஜீத்துக்கு ‘குட்பை’ சொல்லி கிளம்பிய ஸ்ருதி
10/8/2025 2:32:15 PM
விஜய்யுடன் ‘புலி’ படத்தில் இணைந்த ஸ்ருதி ஹாசன் அஜீத்துடன் ‘வேதாளம்’ படத்தில் நடித்து வந்தார். இப்படத்தை சிவா இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு நடந்து முடிவடையும் கட்டத்தை எட்டி உள்ளது. ஸ்ருதி ஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிட்டது. இதையடுத்து அவர் அஜீத்துக்கு ‘பை.. பை’ சொல்லிவிட்டு அடுத்த பட ஷூட்டிங்கிற்கு கிளம்பினார். ஷூட்டிங்கில் பங்கேற்ற அனுபவம் குறித்து இணைய தள டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள ஸ்ருதி, ‘வேதாளம் டீம் அனைவருக்கும் நன்றி. இதன் படப்பிடிப்பில் பங்கேற்றது இனிமையான அனுபவம். இயக்குனரின் இனிமையான அணுகுமுறை பாசிடிவான அனுபவத்தை அளித்தது’ என குறிப்பிட்டிருக்கிறார். இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் மற்றும் டப்பிங் பணிகள் முழுவேகத்தில் நடைபெற்று வருகின்றன. படத்தின் டீஸர் கட் செய்வதில் கவனம் செலுத்தி வருகிறார் இயக்குனர். தீபாவளி தினத்தில் படம் ரிலீஸ் ஆகிறது.