ரூ. 53 லட்சம் கையாடல் கூட்டுறவு துறை ஊழியர்கள் 3 பேர் சிறையில் அடைப்பு
10/8/2025 2:29:59 PM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் சரக துணை பதிவாளர் கண்ணன் சில தினங்களுக்கு முன்பு கணக்குகளை தணிக்கை செய்தார். அப்போது விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பயிர் கடன் ரூ.53.43 லட்சம் கையாடல் செய்யப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் விழுப்புரம் வைத்தியநாதன் (50), எழுத்தர் அனந்தபுரத்தை சேர்ந்த சுந்தரபாண்டி (48), விற்பனையாளர் கல்யாணம்பூண்டியை சேர்ந்த முருகவேல் (40) ஆகியோர் கூட்டுறவு வங்கியில் உறுப்பினராக உள்ளவர்கள் பெயரில் போலியாக கையெழுத்திட்டு பணத்தை கையாடல் செய்ததும் அதிகாரிகள் விசாரணையில் தெரிய வந்தது. இதுகுறித்து துணை பதிவாளர் கண்ணன் விழுப்புரம் மாவட்ட வணிக குற்ற புலனாய்வு பிரிவில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.