இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

மெரினா கடற்கரை சாலையில் பஸ் மீது ஆட்டோ மோதி உருண்டது: 2 பேர் பரிதாப பலி

10/8/2025 2:15:32 PM
பஞ்சாபில் விவசாயிகள் ரயில் மறியல் 12ம் தேதி வரை போராட்டம் நீட்டிப்பு: போக்குவரத்து பாதிப்பால் பயணிகள் அவதி லாரியில் ஏற்றுவதில் கூலி தகராறு ரூ1.75 கோடி நெல் மூட்டைகள் சேதம்: அதிகாரிகள் மெத்தனம்

சென்னை: மெரினா கடற்கரை சாலையில் பஸ் மீது ஆட்டோ மோதியதில் 2 பேர் பலியானார்கள்.சென்னை, புளியந்தோப்பு, சுந்தரபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் காமராஜ் (55). ஆட்டோ டிரைவர். இன்று காலை 6 மணியளவில் பட்டினப்பாக்கத்தை சேர்ந்த மீன் வியாபாரி லதா (44) என்பவரை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு, பட்டினப்பாக்கத்தில் இருந்து காமராஜர் சாலை வழியாக சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டுக்கு கிளம்பினார்.லேடி வெலிங்டன் ஆசிரியர் பயிற்சி கல்லூரி அருகே இன்று காலை 6.15 மணியளவில் ஆட்டோவை காமராஜ் இடதுபுறமாக திருப்பினார். அப்போது சாலை திருப்பத்தில் இருந்த பேரிகார்டில் ஆட்டோ மோதியதால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே ஆட்டோ ஓடியது.அப்போது எதிரே பிராட்வேயில் இருந்து கிண்டி செல்லும் 21ஜி மாநகர பேருந்தின்மீது ஆட்டோ வேகமாக மோதி உருண்டு கவிழ்ந்தது. இதில் ஆட்டோ டிரைவர் காமராஜ் பஸ்ஸின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

ஆட்டோவில் வந்த மீன் வியாபாரி லதா படுகாயங்களுடன் சாலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். இதுகுறித்து தகவலறிந்ததும் அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.அங்கு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த லதாவை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை 8 மணியளவில் லதா பரிதாபமாக பலியானார்.சம்பவ இடத்தில் பலியான காமராஜின் உடலை போலீசார் மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பம்மலை சேர்ந்த பஸ் டிரைவர் குமார் (53) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் சில
  • லாரியில் ஏற்றுவதில் கூலி தகராறு ரூ1.75 கோடி நெல் மூட்டைகள் சேதம்: அதிகாரிகள் மெத்தனம்



  • மழையால் வேகமாக பரவும் சின்னம்மை நோய்; மக்கள் பீதி: சுகாதாரத்துறை நடவடிக்கைக்கு உத்தரவு



  • நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம் மக்கள் வரவேற்பால் ஆளுங்கட்சி கலக்கம்: திருப்பூரில் மு.க.ஸ்டாலின் பேட்டி



  • திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை



  • தமிழகத்தில் ஹிட்லர் ஆட்சி : இளங்கோவன் தாக்கு



  • திருத்தணியில் இன்று பிஎஸ்என்எல் செல்போன் சேவை முடக்கம்: வர்த்தகம், வங்கிகள் பாதிப்பு



  • நடிகர் சங்க தேர்தல் விறுவிறுப்பு: விஷால் அணி வெளியூர்களில் நாடக நடிகர்களிடம் வாக்கு சேகரிப்பு



  • ‘நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம்’ திமுக ஆட்சி மலர்ந்ததும் மீனவர் பிரச்னைக்கு தீர்வு: பவானிசாகரில் மு.க.ஸ்டாலின் பேச்சு



  • இருவேறு விபத்து பெண் உட்பட 3 பேர் பலி



  • ராஜராஜசோழனின் 1030வது சதய விழா தஞ்சையில் 22, 23ம் தேதி நடக்கிறது



Facebook

Twitter

சம்பளம் உயர்த்தினால் தப்பு என்ன? ரகுல் ப்ரீத் பதிலடி
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]