இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

மதுராந்தகம் அருகே ஆசிரியர் பாலியல் தொல்லை : மாணவி தற்கொலை : கிராம மக்கள் சாலை மறியல்: காவல் நிலையம் முற்றுகை

10/8/2025 2:05:46 PM
‘நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம்’ திமுக ஆட்சி மலர்ந்ததும் மீனவர் பிரச்னைக்கு தீர்வு: பவானிசாகரில் மு.க.ஸ்டாலின் பேச்சு சீன ஓபன் டென்னிஸ்; ஜோகோவிச் அபாரம்

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே பள்ளி ஆசிரியர் பாலியல் தொந்தரவு செய்ததால் பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்து கொண்டார். ஆசிரியரை கைது செய்யக் கோரி மக்கள் மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.மதுராந்தகம் அடுத்த சித்தாமூர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (45).  இவரதுமகள் சுமதி (17, பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது.)இவர், செய்யூரில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். படிப்பிலும் விளையாட்டு போட்டிகளிலும் எப்போதும் முதலிடம்வருவார்.இந்நிலையில், இன்று காலை சுமதியை பள்ளிக்கு அனுப்புவதற்காக பெற்றோர் அவரது அறைக் கதவை பலமுறை தட்டினர். திறக்கவில்லை. உடனே பலமாக இடித்து கதவை திறந்தனர். அப்போது அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு இறந்த நிலையில் சுமதி கிடந்தார். இதை பார்த்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.

சுமதி படுக்கும் கட்டிலில் ஒரு கடிதம் இருந்தது. அந்த கடிதத்தில், ‘எனது பள்ளியில் ஆசிரியர் ஒருவர் எனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நான் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.இதுகுறித்து செய்யூர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் செய்தனர். பள்ளி ஆசிரியர் ஒருவரின் பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை செய்து கொண்ட தகவல், கிராமத்தில் தீயாகப் பரவியது.

இந்நிலையில், இன்று காலை 9 மணியளவில் சித்தாமூர்-செய்யூர் சாலையில் அனைத்து கிராம மக்களும் ஒன்றுகூடி, ‘சம்பந்தப்பட்ட ஆசிரியரை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்பதை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து தகவலறிந்ததும் செய்யூர் போலீசாரும் மாவட்ட உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கிராம மக்களுடன் சமாதானபேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் இன்று காலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சாலையில் மக்கள் திரண்டதால், அப்பகுதியில் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டது.இதற்கிடையே செய் யூர் காவல் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகை யிட்டதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

மேலும் சில
  • திருச்சியில் ரூ.10 லட்சம் கொள்ளையில் இன்ஜினியர் உள்பட 5 பேர் கைது



  • திமுக கவுன்சிலர் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது



  • குரோம்பேட்டையில் கணவருடன் தகராறில் பெண் தற்கொலை



  • பெங்களூர் விடுதியில் வைத்து மிரட்டல்: தொழிலதிபர்களிடம் கோடிக்கணக்கில் பறிப்பு : பெண் உள்பட 5 பேர் கைது



  • கல்பாக்கம் அருகே அதிகாலை சோகம் பைக் மீது அரசு பஸ் மோதி புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் பலி : டிரைவர் கைது; மணமகள் வீட்டார் அதிர்ச்சி



  • சிறுமியை சீரழித்த செக்ஸ் ஏடிஜிபி பற்றி எஸ்.ஐ.யிடம் விசாரணை: பலாத்கார வழக்கு சூடு பிடிக்கிறது



  • அம்பத்தூர் அருகே மர்ம நபர்கள் கைவரிசை



  • டாஸ்மாக் கடை முன்பு நின்ற மச்சானை தட்டி கேட்டவருக்கு சரமாரி பீர் பாட்டில் குத்து



  • வண்ணாரப்பேட்டையில் பரபரப்பு மின்வாரிய ஊழியர் வீடு உடைத்து 12 பவுன் நகை, பைக் கொள்ளை: மேலும் 2 இடத்தில் கைவரிசை



  • கணவனின் குடிப்பழக்கத்தால் வந்த சோதனை பாவாடை நாடாவால் கழுத்தை இறுக்கி இரண்டு குழந்தைகள் கொடூர கொலை: தற்கொலைக்கு முயன்ற தாய்க்கு தீவிர சிகிச்சை



Facebook

Twitter

சம்பளம் உயர்த்தினால் தப்பு என்ன? ரகுல் ப்ரீத் பதிலடி
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]