இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

சீன ஓபன் டென்னிஸ் வீனஸ் அதிர்ச்சி தோல்வி

10/7/2025 2:40:48 PM
பஞ்சாபில் விவசாயிகள் ரயில் மறியல் 12ம் தேதி வரை போராட்டம் நீட்டிப்பு: போக்குவரத்து பாதிப்பால் பயணிகள் அவதி லாரியில் ஏற்றுவதில் கூலி தகராறு ரூ1.75 கோடி நெல் மூட்டைகள் சேதம்: அதிகாரிகள் மெத்தனம்

பீஜிங்: சீன ஓபன் டென்னிஸ் தொடரின் 2ம் சுற்றில் முன்னாள் உலக நம்பர் 1 வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் தோல்வி அடைந்தார்.சீன தலைவர் பீஜிங்கில் சீன ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகிறது. மகளிர் ஒற்றையர் 2ம் சுற்று ஆட்டத்தில் 6ம் நிலை வீராங்கனையான செர்பியாவின் அனா இவானோவிக், அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸை எதிர் கொண்டார். இந்த ஆட்டத்தில் இவானோவிக் அசத்தலாக ஆடி,  டை பிரேக்கரில் முதல் செட்டை வென்றார். 2வது செட்டில் வீனஸ் தடுமாறியதை பயன்படுத்திக் கொண்ட இவானோவிக், வீனஸ் வில்லியம்ஸின் சர்வீஸ் கேமை பிரேக் செய்து செட்டை கைப்பற்றினார். இந்த ஆட்டத்தில் அனா இவானோவிக் 7-6 (3), 6-2 என நேர் செட்களில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

அமெரிக்க ஓபன் சாம்பியனான இத்தாலி வீராங்கனை பிளாவியா பென்னட்டா 2ம் சுற்றில் ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசரை எதிர் கொண்டார். அனுபவ ஆட்டத்தின் மூலம் முதல் செட்டை வென்று அதிர்ச்சி கொடுத்தார் ஸ்டோசர். இதன் பின்னர் சுதாரித்து ஆடிய பென்னட்டா தொடர்ச்சியாக ஸ்டோசரின் சர்வீஸ் கேம்களை முறியடித்து அடுத்த 2 செட்களையும் எளிதில் கைப்பற்றினார். இந்த ஆட்டத்தில் பென்னட்டா 3-6, 6-0, 6-4 என்ற செட்களில் ஸ்டோசரை வென்றார்.மகளிர் பிரிவில் பிரபல வீராங்கனைகளான டிமியா பாக்சின்ஸ்கி, ஆண்ட்ரே பெட்கோவிக், ஏஞ்சலீக் கெர்பர், சாரா எர்ரானி, பெத்தானி மேடக் சாண்ட்ஸ், கரோலின் ஓஸ்னியாக்கி, ஸ்வெட்லானா குஸ்னட்சோவா ஆகியோரும் 2ம் சுற்றில் வெற்றி பெற்றுள்ளனர்.ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் முதல் சுற்றில் உலகின் நம்பர் 1 வீரரான நோவாக் ஜோகோவிச், சிமோன் பொலேலியை எதிர் கொண்டார். இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் அசத்தலாக ஆடி 6-1, 6-1 என நேர் செட்களில் பொலேலியை வீழ்த்தினார். முதல் சுற்றில் பிரபல வீரர்கள் ரபேல் நடால், போக்னினி, ஜான் இஸ்னர் ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனர்.

மேலும் சில
  • கான்பூரில் நாளை முதல் ஒன்டே தென் ஆப்பிரிக்க சவாலை எதிர்கொள்ளுமா இந்தியா?



  • சீன ஓபன் டென்னிஸ்; ஜோகோவிச் அபாரம்



  • சீன ஓபன் டென்னிஸ்; காலிறுதியில் ஜோகோவிச்



  • சட்டையால் ஈர்க்கப்பட்டனர் விவிஎஸ் லட்சுமணனை கலாய்த்த டோனி & கோ இந்திய டிரெஸ்சிங் ரூமில் ருசிகரம்



  • வரி ஏய்ப்பு வழக்கில் மெஸ்ஸிக்கு சிறை?



  • இங்கிலாந்துக்கு யாசிர் ஷா அச்சுறுத்தல் மிஸ்பா உல் ஹக் எச்சரிக்கை



  • அமெரிக்க ஓபன் தோல்வியில் இருந்து மீள மிதவைகளின் துணையுடன் ஆற்றில் நீந்தி மகிழ்ந்த செரீனா



  • சீன ஓபன் டென்னிஸ் கால் இறுதியில் ராட்வான்ஸ்கா



  • கட்டாக் சம்பவம், படேல்கள் போராட்டம் தண்ணீர் பாட்டில்களுக்கு தடை; அடையாள அட்டை அவசியம் : இந்தியா-தெ.ஆ. ஒரு நாள் தொடருக்கு பலத்த பாதுகாப்பு



  • 5 ஆண்டுக்கு பின் பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் சோயிப் மாலிக்



Facebook

Twitter

சம்பளம் உயர்த்தினால் தப்பு என்ன? ரகுல் ப்ரீத் பதிலடி
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]