இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

உயிருக்கு ஆபத்தான நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து டெல்லியில் தீவிர சிகிச்சை

10/7/2025 2:40:05 PM
பஞ்சாபில் விவசாயிகள் ரயில் மறியல் 12ம் தேதி வரை போராட்டம் நீட்டிப்பு: போக்குவரத்து பாதிப்பால் பயணிகள் அவதி லாரியில் ஏற்றுவதில் கூலி தகராறு ரூ1.75 கோடி நெல் மூட்டைகள் சேதம்: அதிகாரிகள் மெத்தனம்

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பாஜ தலைவர்களில் ஒருவருமான நவ்ஜோத் சிங் சித்து, உயிருக்கு ஆபத்தான நிலையில், டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நரம்பில் தீவிர ரத்த உறைதல் (டிவிடி) பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை சித்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர். சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால், இது உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த கூடிய பாதிப்பு ஆகும். இதனால் சாதாரண ரத்த ஓட்டம் தடைபடும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் முதல்கட்ட சிகிச்சைகளுக்கு பின் ஆபத்தான கட்டத்தில் இருந்து சித்து மீண்டு விட்டதாக, மருத்துவமனை நிர்வாகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் அவர் உடல் நலம் தேறி வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக இருந்து வந்த சிக்சர் சித்து என அழைக்கப்படும் நவ்ஜோத் சிங் சித்து, 1983-1999 கால கட்டத்தில் 51 டெஸ்ட் மற்றும் 136 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் பஞ்சாப் மாநிலத்தின் அம்ரிஸ்டர் தொகுதியின் எம்பியாகவும் இரண்டு முறை இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார்.  இதனிடையே கீழே விழுந்தாலும் ஆட்டமிழந்து விட மாட்டேன். கடவுளின் கருணையுடன் இதில் இருந்து மீண்டு வருவேன் என தனது டிவிட்டர் பக்கத்தில் சித்து தெரிவித்துள்ளார்.

மேலும் சில
  • கான்பூரில் நாளை முதல் ஒன்டே தென் ஆப்பிரிக்க சவாலை எதிர்கொள்ளுமா இந்தியா?



  • சீன ஓபன் டென்னிஸ்; ஜோகோவிச் அபாரம்



  • சீன ஓபன் டென்னிஸ்; காலிறுதியில் ஜோகோவிச்



  • சட்டையால் ஈர்க்கப்பட்டனர் விவிஎஸ் லட்சுமணனை கலாய்த்த டோனி & கோ இந்திய டிரெஸ்சிங் ரூமில் ருசிகரம்



  • வரி ஏய்ப்பு வழக்கில் மெஸ்ஸிக்கு சிறை?



  • இங்கிலாந்துக்கு யாசிர் ஷா அச்சுறுத்தல் மிஸ்பா உல் ஹக் எச்சரிக்கை



  • அமெரிக்க ஓபன் தோல்வியில் இருந்து மீள மிதவைகளின் துணையுடன் ஆற்றில் நீந்தி மகிழ்ந்த செரீனா



  • சீன ஓபன் டென்னிஸ் கால் இறுதியில் ராட்வான்ஸ்கா



  • கட்டாக் சம்பவம், படேல்கள் போராட்டம் தண்ணீர் பாட்டில்களுக்கு தடை; அடையாள அட்டை அவசியம் : இந்தியா-தெ.ஆ. ஒரு நாள் தொடருக்கு பலத்த பாதுகாப்பு



  • 5 ஆண்டுக்கு பின் பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் சோயிப் மாலிக்



Facebook

Twitter

சம்பளம் உயர்த்தினால் தப்பு என்ன? ரகுல் ப்ரீத் பதிலடி
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]