திருவண்ணாமலை அருகே கோயிலில் ஐம்பொன் சிலைகள் திருட்டு
9/29/2015 3:53:12 PM
செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த புதுப்பாளையம்-பாவூர் சாலையில் காகபுஜந்தர் குரு கோயில் உள்ளது. இக்கோயிலில் மூலவர்களாக காகபுஜந்தர், பகுலதேவி அருள்பாலிக்கின்றனர். இந்த சிலைகள் கற்களால் செய்யப்பட்டுள்ளது. இதன் அருகே 3.45 அடி உயரத்தில் தலா 150 கிலோ எடையுள்ள உற்சவமூர்த்திகளான 16 கரங்கள் கொண்ட காகபுஜந்தர், பகுலதேவி ஐம்பொன் சிலைகள் இருந்தன. இன்று காலை பூசாரி பழனி கோயிலை திறக்க வந்தார். அப்போது கோயில் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கோயிலுக்குள் சென்று பார்த்தபோது, ஐம்பொன்னால் செய்யப்பட்ட 2 உற்சவ மூர்த்தி சிலைகளையும் காணவில்லை. இந்த சிலைகளை மர்ம நபர்கள் வேன் மூலம் கடத்தி சென்றுள்ளனர். அதற்கான தடயங்கள் பதிவாகியிருந்தது.