இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

திருப்பதி அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 7 வாலிபர்கள் இறந்தது எப்படி?: உருக்கமான தகவல்கள்

9/28/2015 2:25:09 PM
சன் குழும எப்எம்கள் ஏலத்தில் பங்கேற்க அனுமதி: தனி நீதிபதிகளின் தீர்ப்பை எதிர்த்த மத்திய அரசு மனு தள்ளுபடி நெல்லையப்பர் கோயிலில் அகழ்வாராய்வு பழங்கால கல்செக்கு யாழி கண்டுபிடிப்பு

திருமலை: திருப்பதியில் உள்ள கபில தீர்த்தத்திற்கு மேல் பகுதியில் குட்டை உள்ளது. இதில் திருப்பதியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட வாலிபர்கள் நேற்று குளித்தனர். திருமலையில் கனமழை பெய்துகொண்டிருந்ததால் மாலை 4 மணியளவில் வாலிபர்கள் குளித்துக்கொண்டிருந்த குட்டை பகுதியில் திடீரென காட்டாற்று வெள்ளம் பயங்கர சத்தத்துடன் பாய்ந்து வந்தது. இதில் அங்கு குளித்துக்கொண்டிருந்த வாலிபர்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர். அங்கு யாரும் இல்லாததால் அவர்களை மீட்கவோ அவர்களை பற்றி உடனடியாக தகவல் தெரிவிக்கவோ முடியவில்லை.
இந்நிலையில் கபிலதீர்த்த தெப்பக்குளத்தில் 4 சடலங்கள் அடித்து வரப்பட்டிருந்தது. அங்கு சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்த பக்தர்கள் அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த பாபுஜான் என்பவர், இறந்தவர்கள் திருப்பதி சந்திரசேகர் ரெட்டி காலனியை சேர்ந்த தோகித், மங்கலத்தை சேர்ந்த காந்த் என 2 பேரை அடையாளம் காட்டினார். இதுகுறித்து அவர் கூறுகையில், நாங்கள் அனைவரும் மெக்கானிக் வேலை செய்துவருகிறோம். வெங்கடேஷ், காந்த், தோகித் மற்றும் நான் ஆகிய 4 பேரும் கபில தீர்த்த மலைமீதுள்ள முதலாவது பிளேட் அருகே குளிக்க சென்றோம். எனக்கு நீச்சல் தெரியாது என்பதால் கரையில் அமர்ந்திருந்ேதன். அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் வந்த வெள்ளத்தில் குளித்துக்கொண்டிருந்தவர்கள் அடித்து செல்லப்பட்டனர். என்னுடன் வந்தவர்களில் 2 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். வெங்கடேஷ் என்ன ஆனார் என தெரியவில்லை என கூறி கதறி அழுதார்.

இதுகுறித்து அலிபிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் 2  சடலங்கள் குறித்து விசாரணை நடத்தினர். இதற்கிடையில் போலீசார், கபில தீர்த்தத்தில் உள்ள குளத்தில் இருந்த தண்ணீரை பம்ப்மூலம் வெளியேற்றிவிட்டு தேடி பார்த்தபோது மேலும் 3 பேரின் சடலங்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். அந்த சடலங்களை மீட்டு விசாரணை நடத்தியதில், அவர்கள் நிகில், பாலாஜி, சச்சின் வர்மா என தெரியவந்தது. இதையடுத்து வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது. மேலும் குளத்தில் வேறு யாராவது உள்ளார்களா என போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் சில
  • தேர்தல் விதிமுறை மீறல் மோடி மீதான வழக்கு ஒத்தி வைப்பு



  • வங்கி வட்டி விகிதத்தை குறைத்தது ஆர்பிஐ வீடு, வாகன கடன் வட்டி குறைகிறது



  • அரியானா மின்வாரியத்தின் அலட்சியம் சாதாரண வீட்டிற்கு ரூ.85 கோடி மின் கட்டணம்: பயனீட்டாளர்கள் அதிர்ச்சி



  • பீகார் தேர்தல் ஒபிசிகளுக்கும் உயர் சாதியினருக்கும் இடையே வெளிப்படையான போட்டி: லாலு பிரசாத் பிரசாரத்தால் பரபரப்பு



  • படகு கவிழ்ந்து அசாமில் 40 பேர் பலி



  • கேரள அரசின் இணையதளம் பாகிஸ்தானால் திடீர் முடக்கம் : பேஸ்புக் தகவலால் பரபரப்பு



  • உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு 200 சுற்றுலா தலங்களில் இலவச அனுமதி: மத்திய அரசு அறிவிப்பு



  • தனி நபர் அதிகாரம் கொண்ட கட்சியல்ல காங்கிரஸ் : பாஜ மீது பாய்ச்சல்



  • உளவுத்துறை அதிகாரி கடத்தி கொலை : மேகாலயாவில் தீவிரவாதிகள் வெறிச்செயல்



  • அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் பீகாரில் மோடி அதிரடி பிரசாரம்: பாஜ அறிவிப்பு



Facebook

Twitter

Chennai Airport secretly shooting the remake
சென்னை விமான நிலையத்தில் ரகசியமாக நடந்த ரஜினி பட ஷூட்டிங்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]