ஆடியோவால் விஷ்ணுபிரியா வழக்கில் திருப்பம் : போலீஸ் அதிகாரிகளிடம் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி முடிவு
9/28/2015 2:15:32 PM
சேலம்: தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சேலம் இன்ஜினியர் கோகுல்ராஜ் ெகாலை வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்தவர் திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா. இந்த கொலை வழக்கு தொடர்பாக 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான யுவராஜ் என்பவரை தனிப்படையினர் தீவிரமாக ேதடி வந்தனர். இந்நிலையில் கடந்த கடந்த 18ம் தேதி, விசாரணை அதிகாரியான டிஎஸ்பி விஷ்ணுபிரியா கேம்ப் ஆபீசில் உள்ள தனது அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். கோகுல்ராஜ் கொலை வழக்கில் விஷ்ணுபிரியாவின் துரித நடவடிக்ைககளை கட்டுப்படுத்த உயரதிகாரிகள் ெகாடுத்த டார்ச்சரே அவரது தற்கொலைக்கு காரணம் என்று சக போலீசார், பெற்றோர், அரசியல் கட்சிகள் என அனைத்து தரப்பினரும் பரபரப்பு புகார் தெரிவித்தனர். இதையடுத்து வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில் கோகுல்ராஜ் கொலை வழக்கில் தலைமைறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான யுவராஜ், டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை குறித்து ேநற்று வெளியிட்ட வாட்ஸ் அப் ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி விஷ்ணுபிரியா இருந்தாலும், ஏடிஎஸ்பி ஒருவரும், வேறொரு டிஎஸ்பி ஒருவமே முன்னின்று விசாரணை நடத்தினர். விஷ்ணுபிரியாவை அவர்கள் பலமுறை மரியாதைக்குறைவாக ேபசினர் என்று யுவராஜ் ஆடியோவில் திடுக் தகவலை தெரிவித்துள்ளார்.
இதே நேரத்தில் ஆடியோவில் ஒரு இடத்தில் கூட, கோகுல்ராஜ் கொலைக்கும், தனக்கும் சம்பந்தம் இல்லை என்று யுவராஜ் கூறவில்லை. எனவே இந்த ஆடியோவை யுவராஜ் கொடுத்த ஒப்சேலம், செப். 28-
தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சேலம் இன்ஜினியர் கோகுல்ராஜ் ெகாலை வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்தவர் திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா. இந்த கொலை வழக்கு தொடர்பாக 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான யுவராஜ் என்பவரை தனிப்படையினர் தீவிரமாக ேதடி வந்தனர். இந்நிலையில் கடந்த கடந்த 18ம் தேதி, விசாரணை அதிகாரியான டிஎஸ்பி விஷ்ணுபிரியா கேம்ப் ஆபீசில் உள்ள தனது அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோகுல்ராஜ் கொலை வழக்கில் விஷ்ணுபிரியாவின் துரித நடவடிக்ைககளை கட்டுப்படுத்த உயரதிகாரிகள் ெகாடுத்த டார்ச்சரே அவரது தற்கொலைக்கு காரணம் என்று சக போலீசார், பெற்றோர், அரசியல் கட்சிகள் என அனைத்து தரப்பினரும் பரபரப்பு புகார் தெரிவித்தனர். இதையடுத்து வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில் கோகுல்ராஜ் கொலை வழக்கில் தலைமைறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான யுவராஜ், டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை குறித்து ேநற்று வெளியிட்ட வாட்ஸ் அப் ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி விஷ்ணுபிரியா இருந்தாலும், ஏடிஎஸ்பி ஒருவரும், வேறொரு டிஎஸ்பி ஒருவமே முன்னின்று விசாரணை நடத்தினர். விஷ்ணுபிரியாவை அவர்கள் பலமுறை மரியாதைக்குறைவாக ேபசினர் என்று யுவராஜ் ஆடியோவில் திடுக் தகவலை தெரிவித்துள்ளார்.
இதே நேரத்தில் ஆடியோவில் ஒரு இடத்தில் கூட, கோகுல்ராஜ் கொலைக்கும், தனக்கும் சம்பந்தம் இல்லை என்று யுவராஜ் கூறவில்லை. எனவே இந்த ஆடியோவை யுவராஜ் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலமாகேவ சிபிசிஐடி போலீசார் கருதுகின்றனர். இதையடுத்து வெளி மாநிலத்தில் பதுங்கியுள்ள யுவராஜை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், ‘‘யுவராஜை கைது செய்தால் கோகுல்ராஜ் கொலைக்கான காரணங்கள் வெட்ட வெளிச்சமாகும். அதே ேநரத்தில் விஷ்ணுபிரியா தற்கொலை தொடர்பான பல்வேறு சந்தேகங்களுக்கும் விளக்கம் கிடைக்கும். எனவே முதல் கட்டமாக யுவராஜை கைது செய்வதில் சிபிசிஐடி போலீசார் மும்முரம் காட்டி வருகின்றனர். கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்கள் உள்ள சில குறிப்பிட்ட இடங்களில் யுவராஜ் தங்கியிருப்பதாகவும் ரகசிய தகவல்கள் வருகிறது. இதனை கருத்தில் ெகாண்டு பிற மாநிலங்களிலும் யுவராஜ் குறித்த தேடுதல் வேட்டையை சிபிசிஐடி போலீசார் நடத்தி வருகின்றனர். உயரதிகாரிகள் மீது யுவராஜ் கூறிய புகார்கள் குறித்தும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
இதுவரை போலீசையும், போலீஸ் அதிகாரிகளையும் திட்டி பல முறை யுவராஜ் வாட்ஸ் அப் அனுப்பியுள்ளார். ஆனால் அவர் இருக்கும் இடத்தைக் கூட போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. கடந்த 2 மாதமாக போலீசுக்கு அவர் தண்ணி காட்டி வருகிறார். போலீசார் தேடி வந்தாலும் துணிச்சலாக யுவராஜ் பேட்டி கொடுப்பதும், ஆடியோ அனுப்புவதும் அதிகரித்துள்ளது போலீசுக்கு அவர் சவால் விடுவதையே காட்டுவதாக உயர் அதிகாரிகள் கருதுகின்றனர். ஸ்கார்ட்லாந்து யார்டு போலீசுக்கு இணையாக பேசப்படும் தமிழக போலீசாரால் யுவராஜை பிடிக்க முடியாமல் இருப்பது, குற்றவாளிக்கு அதிகாரிகள் உடந்தையாக இருப்பதையே காட்டுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். போலீசுக்கு சவாலாக சுற்றிவரும் யுவராஜை பிடிக்காமல் இருப்பது போலீசாரின் தேடுதல் வேட்டையில் ஏற்பட்ட தோல்வியையே காட்டுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
புதல் வாக்குமூலமாகேவ சிபிசிஐடி போலீசார் கருதுகின்றனர். இதையடுத்து வெளி மாநிலத்தில் பதுங்கியுள்ள யுவராஜை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், ‘‘யுவராஜை கைது செய்தால் கோகுல்ராஜ் கொலைக்கான காரணங்கள் வெட்ட வெளிச்சமாகும். அதே ேநரத்தில் விஷ்ணுபிரியா தற்கொலை தொடர்பான பல்வேறு சந்தேகங்களுக்கும் விளக்கம் கிடைக்கும். எனவே முதல் கட்டமாக யுவராஜை கைது செய்வதில் சிபிசிஐடி போலீசார் மும்முரம் காட்டி வருகின்றனர். கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்கள் உள்ள சில குறிப்பிட்ட இடங்களில் யுவராஜ் தங்கியிருப்பதாகவும் ரகசிய தகவல்கள் வருகிறது. இதனை கருத்தில் ெகாண்டு பிற மாநிலங்களிலும் யுவராஜ் குறித்த தேடுதல் வேட்டையை சிபிசிஐடி போலீசார் நடத்தி வருகின்றனர். உயரதிகாரிகள் மீது யுவராஜ் கூறிய புகார்கள் குறித்தும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.