ஸ்ரீராமானுஜர் பிறந்தநாளில் திருத்தணி பிரமுகருக்கு விருது
9/26/2015 12:42:28 PM
திருத்தணி, சென்னை, தி.நகர், இந்தி பிரசார சபாவில் ஸ்ரீராமானுஜர் பிறந்த நாளை முன்னிட்டு, கல்வி மற்றும் பல்வேறு துறைகளில் சிறப்பான சேவை செய்தவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.இதில் திருத்தணியை சேர்ந்த ராஷ்ட்ரீய சேவா சமிதியில் இருந்து டாக்டர் ஜி.முனிரத்தினம், திருத்தணி நகரில் பல்வேறு சேவைகள் செய்ததற்காக பாராட்டி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
இந்த பாராட்டு சான்றிதழை ஸ்ரீராமானுஜர் மிஷன் டிரஸ்ட்டின் தலைவர் பிரசன்ன வெங்கடாச்சாரி சதுர்வேதி வழங்கினார். இதில் வருமானவரி துறை இயக்குநர் உமர் அகமது இலாசி, அண்ணா விஸ்வ வித்யாலயாவின் திட்ட இயக்குநர் டாக்டர் கலாநிதி, ஐக்கிய ராஜ்ய சமிதி பிரதிநிதி டாக்டர் சுபாஷ் சந்திரா ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.