கடன் தொல்லையால் டீக்கடை ஓனர் தூக்கிட்டு தற்கொலை
9/26/2015 12:41:18 PM
ஆவடி: கடனை அடைக்க முடியாமல் தவித்த டீக்கடை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்தார்.அம்பத்தூரை அடுத்த கொரட்டூர், சாஸ்திரி ஸ்கொயர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (58). இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் டீக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி பஞ்சவர்ணம் (52). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. நேற்று அதிகாலை 4 மணியளவில் வீட்டில் இருந்து செல்வராஜ்,டீக்கடைக்கு சென்றார். காலையில் டீக்கடைக்கு ஆட்கள் வந்தனர். கடைக்குள் செல்வராஜ் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார்.
இதுபற்றி தகவல் கிடைத்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, செல்வராஜின் சடலத்தை கைப்பற்றி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். 3 மகள்களின் திருமணத்துக்கு வாங்கிய கடனை அடைக்க முடியாமல் சிரமப்பட்ட செல்வராஜ் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.