ஆசிரியை வீட்டில் 26 பவுன் கொள்ளை: குன்றத்தூரில் பட்டப்பகலில் துணிகரம்
9/26/2015 12:40:31 PM
பூந்தமல்லி: குன்றத்தூரில் பட்டப்பகலில் ஆசிரியையின் வீட்டில் 26 பவுன் நகைகள், பணத்தை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை அருகே குன்றத்தூர் மேத்தா நகர் ஜவகர் விரிவுபகுதியை சேர்ந்தவர் மதியழகன் (47). இவர் கிண்டியில் உள்ள தனியார் கம்பெனியில் அதிகாரியாக வ உள்ளார். இவரது மனைவி நர்மதா (44). குன்றத்தூரில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியை. இவர்களது மகள் ஸ்ரீமதி (17), குன்றத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார்.
நேற்று காலையில் வழக்கம்போல தம்பதி வேலைக்கு சென்றனர். இதன்பிறகு ஸ்ரீமதி, கதவை பூட்டிவிட்டு பள்ளிக்கு சென்றார். வகுப்பு முடிந்ததும் வீட்டுக்கு வந்த ஸ்ரீமதி, வீட்டின் கதவு திறந்துகிடந்ததால் அதிர்ச்சியடைந்தார். வீட்டில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்தது.உடனடியாக பெற்றோருக்கு தகவல் கொடுத்தார். பெற்றோர் வந்தனர். பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 26 பவுன் நகை, ரூ.4 ஆயிரம் பணம் கொள்ளை போயிருந்தது தெரிந்தது.
இதுகுறித்து குன்றத்தூர் போலீசில் புகார் கொடுத்தனர். வழக்கு பதிந்து விசாரணை நடத்தியதில் கதவின் பூட்டு உடைக்கப்படவில்லை என்று தெரிகிறது. _மதி கதவை பூட்டாமல் சென்று விட்டாரா அல்லது கொள்ளை ஆசாமிகள் கள்ளச்சாவி போட்டு கதவை திறந்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.