இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

கோ. ப. அன்பழகன் பிறந்த நாள் ரூ50 லட்சம் நலத்திட்ட உதவிகள்

9/26/2015 12:39:40 PM
இந்தியாவில் அனைவருக்கும் இன்டர்நெட் வசதி : சிலிகான் பள்ளத்தாக்கில் பிரதமர் மோடி பேச்சு உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு 200 சுற்றுலா தலங்களில் இலவச அனுமதி: மத்திய அரசு அறிவிப்பு

மதுராந்தகம்:  மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கத்தின் 13ம் ஆண்டு தொடக்கவிழா மற்றும் அந்த இயக்கத்தின் தலைவர் கோ.ப.அன்பழகனின் பிறந்தநாள் விழா, பங்காரு அடிகளாரின் 75ம் ஆண்டு பிறந்தநாள் விழா ஆகிய முப்பெரும் விழா மேல்மருவத்தூரில் உள்ள ஞான பீடத்தில் நேற்று காலை கொண்டாடப்பட்டன.கோ.ப.அன்பழகன் தனது பிறந்தநாளை முன்னிட்டு தனது தந்தை பங்காரு அடிகளாரை சந்தித்து ஆசி பெற்றார். பிறகு ஞானபீடத்தில் பிறந்தநாள் கேக் வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஆன்மிக இயக்க தலைவர் கோ.ப.அன்பழகன், ஆன்மிக இயக்க இளைஞரணி தலைவர் கோ.ப.செந்தில்குமார் ஆகியோர் இணைந்து கேக் வெட்டினர். பின்னர் அங்கு கூடியிருந்த பொதுமக்கள், பக்தர்கள், குழந்தைகள் அனைவருக்கும் கேக் வழங்கப்பட்டது. அங்குள்ள மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அன்பழகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.இதன்பிறகு ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கறவை மாடு, தையல் இயந்திரம், இரு சக்கர சைக்கிள், கல்வி உதவி தொகை, 10 இருளர் குடும்பத்தினருக்கு வீடுகள் கட்டி தரப்பட்டு அதற்கான சாவிகள் அவர்களிடம் வழங்கப்பட்டன. விழாவில் ரூ.50 லட்சம் மதிப்பில் இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மதுரை, விருதுநகர், சிவகங்கை, பாண்டிச்சேரி, ஆந்திர மாநிலம் நகரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஆன்மிக தொண்டு இயக்கத்தினர், அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கோயில்கள் ஆகியவற்றில் சுகாதார பணிகளை தொண்டு பணிகளாக மேற்கொண்டனர்.முப்பெரும் விழாவில், ஆஷா அன்பழகன், அகத்தியன், மதுமலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் சில
  • போலீஸ்காரர்கள் மீது தாக்குதல் சம்பவம்: புழல் சிறையில் அதிரடி சோதனை



  • திருச்சியில் இருந்து பினாங்கிற்கு விமான சேவை தொடங்கியது நாட்டிலேயே முதல்முறை



  • ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் மரக்கன்றுகள் நடும் விழா



  • குடும்பத்துடன் குதூகலிப்போம் வீக்கென்டில் ‘விறுவிறு...‘விடுமுறையால் ‘சுறுசுறு...’



  • தற்கொலை செய்து கொண்ட டிஎஸ்பி விஷ்ணுபிரியா வீட்டுக்கு வந்த மர்ம கடிதத்தால் பரபரப்பு



  • ஒகேனக்கல் காவிரியில் நள்ளிரவில் திடீர் வெள்ளம்: மெயின் அருவியில் குளிக்க தடை



  • வாகன ஓட்டிகளை மிரட்டி பணம் பறிப்பு வாட்ஸ் அப்பில் சிக்கிய டிராபிக் எஸ்ஐ



  • ஆசிரியை உடல் தானம்



  • வண்டலூர் உயிரியல் பூங்காவில் காட்டு மாடு பெண் கன்று ஈன்றது



  • ஊரப்பாக்கம் ஊராட்சியில் சாய்ந்து கிடந்த மின்கம்பங்கள் சீரமைப்பு : ‘தமிழ் முரசு’ செய்தி எதிரொலி



Facebook

Twitter

Chennai Airport secretly shooting the remake
சென்னை விமான நிலையத்தில் ரகசியமாக நடந்த ரஜினி பட ஷூட்டிங்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]