இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

கொரிய ஓபன் டென்னிஸ் ஸ்டீபன்ஸ் அதிர்ச்சி தோல்வி

9/26/2015 12:35:02 PM
விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் சி.பி.ஐ விசாரணைக்கு வலியுறுத்துவோம் : சீத்தாராம் யெச்சூரி ஜெயலலிதா அறிவித்தபடி மின்திட்டம் எதுவும் தொடங்கவில்லை : விஜயகாந்த் குற்றச்சாட்டு

சியோல்:  கொரிய ஓபன் டென்னிஸ் காலிறுதியில் அமெரிக்க வீராங்கனை ஸ்டீபன்ஸ் அதிர்ச்சிகரமான முறையில் தகுதி நிலை வீராங்கனையிடம் தோல்வி அடைந்தார்.சியோல் நகரில் நடந்து வரும் கொரிய ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதி ஆட்டங்கள் நேற்று நடந்தது. தகுதி நிலை வீராங்கனையான பெலாரஸ் நாட்டின் அலெக்சாண்ட்ரா சாஸ்னோவிச்சுடன், மூன்றாம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் காலிறுதியில் மோதினார். துல்லியமான சர்வீஸ்களின் உதவியால் அலெக்சாண்ட்ரா சாஸ்னோவிச், ஸ்டீபன்ஸை திணற வைத்தார்.

ஸ்டீபன்சின் சர்வீஸில் கிடைத்த 11 பிரேக் பாயிண்ட் வாய்ப்புகளில் 5 வாய்ப்புகளை சாஸ்னோவிச் கைப்பற்றினார். இந்த ஆட்டத்தில் சாஸ்னோவிச் 6-3, 6-2 என நேர் செட்களில் ஸ்லோன் ஸ்டீபன்ஸை தோல்வியடையச் செய்தார். சாஸ்னோவிச் அரையிறுதியில் இரண்டாம் நிலை வீராங்கனையான அன்னா கரோலினா ஷ்மில்டோவாவை எதிர் கொள்ள உள்ளார். ஷ்மில்டோவா காலிறுதியில் 6-4, 3-6, 6-1 என்ற செட்களில் ஜெர்மனி வீராங்கனை மோனா பார்த்தெலை வென்றது குறிப்பிடத்தக்கது.

முதல் நிலை வீராங்கனையான இரினா கார்மெலா பெகு, காலிறுதியில் ஸ்வீடன் வீராங்கனை ஜொகனா லார்சனின் கடும் எதிர்ப்பை எதிர்கொள்ள நேரிட்டது. இதில் கார்மெலா பெகு 6-4, 7-5 என்ற செட்களில் வென்றார். அவர் அரையிறுதியில் பெல்ஜிய வீராங்கனை அலிசன் வான் உத்வான்க்குடன் மோத உள்ளார். உத்வான்க் காலிறுதியில் 6-1, 4-6, 6-2 என்ற செட் கணக்கில் ரஷ்ய வீராங்கனை அலிசாவெடா குளிசென்கோவாவை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. ஜான்கோவிச் அபாரம்சீனாவில் நடந்து வரும் குவான்சூ சர்வதேச டென்னிஸ் போட்டியில் நேற்று அரையிறுதி ஆட்டங்கள் நடந்தது. செர்பிய வீராங்கனை ஜெலினா ஜான்கோவிச், பெல்ஜியம் வீராங்கனை யானினா விக்மேயருடன் அரையிறுதியில் மோதினார்.

இதற்கு முன் இருவரும் மோதிய 8 போட்டிகளில் தொடர்ச்சியாக விக்மேயர் வென்றுள்ளார் என்பதால், நேற்றைய போட்டியிலும் அவரே ஆதிக்கம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விக்மேயர் கடும் போராட்டத்தை வெளிப்படுத்தினாலும் அவரால் வெற்றிக்கனியை பறிக்க முடியவில்லை. மூன்றாவது செட்டின் 11வது கேமில் 3 புள்ளிகள் பின்தங்கியிருந்த நிலையில் இருந்து மீண்டு வந்து ஜான்கோவிச் வெற்றி பெற்றார். 6-3, 2-6, 7-5 என்ற செட்களில் ஜான்கோவிச் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.  மற்றொரு அரையிறுதியில் செக் குடியரசு வீராங்கனை டெனீசா அல்லெர்டோவா 7-5, 6-2 என நேர் செட்களில் மூன்றாம் நிலை வீராங்கனையான இத்தாலியின் சாரா எர்ராணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றார்.

மேலும் சில
  • கேப்டனாக என்னை விட கோஹ்லி சிறப்பாக செயல்பட வேண்டும் கங்குலி பேட்டி



  • விஐபிகளுக்கு சரக்கு கட்



  • ஊகான் ஓபன் டென்னிஸ் இவோனோவிச் முன்னேற்றம்



  • ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப் இந்திய வீரர் குர்பிரீத்துக்கு வெள்ளி



  • ஷென்சென் ஓபன் டென்னிஸ்: ஆஸ்டின் கிராஜிசெக் முன்னேற்றம்



  • தூய்மை இந்தியா திட்டத்திற்கு பாடல் பாடிய சச்சின்: அக்டோபர் 2ம் தேதி வெளியாகிறது?



  • ஆசிய துப்பாக்கி சுடும் போட்டி: அயோனிகாவுக்கு வெண்கலம்



  • செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஓபன் டென்னிஸ்: மிலாஸ் ரோனிச் சாம்பியன்



  • மும்பை ரஞ்சி அணி அறிவிப்பு



  • இந்தியா வந்தது தென் ஆப்பிரிக்கா நாளை பயிற்சி போட்டியில் மோதல்



Facebook

Twitter

Chennai Airport secretly shooting the remake
சென்னை விமான நிலையத்தில் ரகசியமாக நடந்த ரஜினி பட ஷூட்டிங்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]