நந்திதா மனதை மாற்றிய லட்சுமி மேனன்
9/26/2015 12:34:00 PM
‘கும்கி’ லட்சுமிமேனனை சமீபகாலமாக திரையில் காண முடியவில்லையே என்பவர்களுக்கு அஜீத்தின் ‘வேதாளம்’ படத்தில் அவரின் தங்கையாக நடித்து வருகிறார் என்ற தகவல் ஆறுதல் தந்திருக்கிறது. அவரை தொடர்ந்து ரஜினியின் தங்கையாக ‘கபாலி’ படத்தில் நடிக்கிறார் தன்ஷிகா. இவர்களை பார்த்து ‘அட்ட கத்தி’ நந்திதா மனம் மாறி இருக்கிறார். ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என்று அவர் பிடிவாதமாக இருந்தார்.‘எதிர்நீச்சல்’, ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘முண்டாசுப்பட்டி’ போன்ற படங்களில் அவர் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, விஷ்ணு போன்ற ஹீரோக்களுடன் ஜோடி போட்டிருந்தார் நந்திதா தற்போது இடம்பொருள் ஏவல், உப்புகருவாடு படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். விஜய்யின் புலி படத்தில் சிறிய வேடமொன்றில் நடிக்கிறார். முன்னணி ஹீரோக்களின் தங்கை தவிர வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிக்க தயாராக இருப்பதாக இயக்குனர்களுக்கு தூது விட்டுக்கொண்டிருக்கிறார் நந்திதா.