சமந்தா-முருகதாஸ் இணையதள ரொமான்ஸ்
9/26/2015 12:33:24 PM
இளம் நடிகர்கள் முதல் இயக்குனர்கள் வரை ஜோவியலாக பழகுபவர் சமந்தா. ஒரு நிகழ்ச்சியில் காமெடி நடிகர் பேசும்போது, ‘சமந்தாபோல் பெண் கிடைத்தால் கல்யாணம் செய்துகொள்ள தயார்’ என அவர் முன்பே பேசினார். அதற்கு சமந்தா, ‘சதீஷை திருமணம் செய்துகொள்ள தயார்’ என ஜாலியாக பதில் அளித்தார். விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘10 எண்றதுக்குள்ள’ பட நிகழ்ச்சி ஒன்றில் சமீபத்தில் பங்கேற்றார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். அவரிடம், ‘கத்தி படத்தில் சமந்தாவை ஹீரோயினாக்கிய நீங்கள் இந்தியில் இயக்கும் அகிரா படத்தில் சமந்தாவை ஒப்பந்தம் செய்யாமல் சோனாக்ஷியை ஹீரோயினாக்கியது ஏன்?’ என கேட்டபோது,’சமந்தாவை நான் டைவர்ஸ் (விவாகரத்து) செய்துவிட்டேன்’ என காமெடியாக பதில் சொன்னார்.இதுபற்றி தனது இணையதள பக்கத்தில் குறிப்பிட்டிருக்கும் சமந்தா, ‘முருகதாஸ் சார் உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் என்னை விவாகரத்து செய்தாலும் உங்கள் மீது நிறைய காதலும் சந்தோஷமும் உள்ளது. நிறைய ஹிட் படங்கள் தர வாழ்த்துக்கள்’ என குறிப்பிட்டிருந்தார். இதற்கு டுவிட்டர் இணையதள பக்கத்தில் பதில் அளித்துள்ள முருகதாஸ், ‘ஹா ஹா ஹா... எப்போதுமே எனது சுவீட்ஹார்ட் (இதயம் கவர்ந்தவர்) நீதான் என்பது உனக்கு தெரியாதா?’ என கூறி உள்ளார்.