இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

கண்களை கட்டிக்கொண்டு தேர்வு எழுதி 7ம் வகுப்பு மாணவன் அசத்தல்

9/26/2015 12:14:19 PM
அஸ்ட்ரோசாட், 6 வெளிநாட்டு செயற்கைகோளுடன் பிஎஸ்எல்வி சி-30 விண்ணில் பாய்ந்தது உலகின் பார்வை எங்கள் மீது 21ம் நூற்றாண்டு இந்தியாவுக்கானது அமெரிக்காவில் மோடி பெருமித பேச்சு

கோவை: கோவை பீளமேடுபுதூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன், ராதிகாதேவி தம்பதியின் மகன் மாதேஷ் பரத்குமார்(12). நவஇந்தியாவில் உள்ள தனியார் மெட்ரிக்பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கிறார். இவர் கோவை தனியார் பயிற்சி நிறுவனத்தில் ‘பிரைன் ட்ரைன் புரோகிராம்’ என்ற பயிற்சியை பெற்று வருகிறார்.பயிற்சி மூலம், கண்களை மூடிக்கொண்டே நாளிதழ்களை வாசித்தல், எதிரேயுள்ள உள்ள பொருள்களை அடையாளம் காணுதல், சாலையில் எந்த வாகனம் செல்கிறது என கண்டுபிடித்தல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் மாதேஷ் பரத்குமாரால் செய்ய முடிந்தது. மேலும், கண்களை கட்டியவாறு தேர்வை சரியாக தேர்வு எழுதும் நோக்கில், சில பிரத்யேகமான பயிற்சிகளை பெற்றார்.

இந்நிலையில், காலாண்டுத்தேர்வில் ஒரு பாடத்தை மட்டும் கண்களை கட்டிக்கொண்டு தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என பள்ளி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தார். அவருக்கு நேற்று அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி நேற்று நடந்த காலாண்டு இறுதி தேர்வின், ஆங்கிலப் பாடத்தேர்வினை மாதேஷ் பரத்குமார் கண்ணை கட்டியவாறு பிழையின்றி எழுதி அசத்தினார்.  சக மாணவர்களும், ஆசிரியர்களும் மாதேஷ் பரத்குமாரை பாராட்டினர்.இதுகுறித்து பரத்குமார் கூறுகையில், ‘பயிற்சி மூலம் கண்ணை கட்டிக்கொண்டு டி.வியில் உள்ள நிகழ்ச்சிகளை யூகிக்கவும், எதிரில் உள்ளவர்கள் என்ன நிற உடை அணிந்திருக்கிறார்கள் உள்ளிட்டவை அறிய முடியும். முழுமையாக மூளையை பயன்படுத்தும் வகையிலும், நினைவாற்றல் அதிகரிக்கவும் பல்வேறு பயிற்சிகள் அளிக்கின்றனர். மேலும், இந்த பயிற்சியில் எழுத்துகளுக்கு வாசனை உண்டு என்பதை அறிந்தேன். அதை பயன்படுத்தியே, நான் கண்களை கட்டிக்கொண்டு தேர்வு எழுதினேன்’ என்றார்.

மேலும் சில
  • உயரம் குறைந்த நடைமேடைகள் உயிர் பயத்தில் பயணிகள்: அடிப்படை வசதிகள் கூட இல்லாத கோட்டை ரயில்நிலையம்



  • காவிரி நீர் பெற்றுத்தர வலியுறுத்தி டெல்டாவில் நாளை கடையடைப்பு: பஸ், ரயில் மறியல்



  • அஸ்ட்ரோசாட், 6 வெளிநாட்டு செயற்கைகோளுடன் பிஎஸ்எல்வி சி-30 விண்ணில் பாய்ந்தது



  • காஞ்சிபுரம் அருகே பரிதாபம்: அதிமுக நகராட்சி தலைவர் கார் மோதி 3 பேர் பலி



  • திருத்தணி அருகே ஊர்க்காவல் படை வீரர் திடீர் மரணம்...



  • நரிக்குறவர் இல்ல திருமணம் : திமுகவினர் பங்கேற்பு



  • தையூர் ஊராட்சியில் உயர்கோபுர மின்விளக்கு



  • தமிழகத்தை நெருங்க பயப்படும் டெங்கு தஞ்சையில் அமைச்சர் பெருமிதம்



  • தஞ்சை அருகே துப்பாக்கியுடன் சிக்கிய ரவுடிகள்



  • நாடார் சங்கம் 44வது ஆண்டு பொதுக்குழு கூட்டம்



Facebook

Twitter

Chennai Airport secretly shooting the remake
சென்னை விமான நிலையத்தில் ரகசியமாக நடந்த ரஜினி பட ஷூட்டிங்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]