திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் இளம் கலாம் விருது வழங்கும் விழா
9/25/2015 2:15:27 PM
திருவள்ளூர்: திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் பள்ளியில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பள்ளிக்கு வருகை புரிந்த நாளை நினைவுகூறும் வகையில், ஸ்ரீநிகேதனின் இளம் கலாம் விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளி தாளாளர் விஷ்ணுசரண் தலைமை வகித்தார். பள்ளியில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு வைத்து அதில், ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியர்களுக்கு ஸ்ரீ நிகேதனின் இளம்கலாம் என்ற விருதும், அவரது புகைப்படம் அடங்கிய சான்றிதழும் வழங்கப்பட்டது.இந்த விருது மற்றும் சான்றிதழை பள்ளியின் மூத்த ஆசிரியர் கவிதா கந்தசாமி, அறிவியல் ஆசிரியர் பரந்தாமன் வழங்கினர். தொடர்ந்து கலாம் குறித்த கவிதை வாசித்தும், பாடல்கள் பாடியும் சிறப்பு வழிபாட்டு கூட்டம் நடைபெற்றது. பின்னர் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.இந்த விருது மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா ஆண்டுதோறும் செப்டம்பர் 23ம் தேதி சிறப்பாக கொண்டாடப்படும் என பள்ளி தாளாளர் விஷ்ணுசரண் தெரிவித்தார்.