திருத்தணி நகரில் தமாகா சார்பில் கையெழுத்து இயக்கம் : இஎஸ்எஸ்.ராமன் பங்கேற்பு
9/25/2015 2:15:09 PM
திருத்தணி: திருத்தணி நகர தமாகா சார்பில், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி 1 கோடி கையெழுத்து இயக்கம் நேற்று நகராட்சி அலுவலகத்தில் துவங்கப்பட்டது.தமாகா நகரத் தலைவர் கோல்டன் என்.எஸ்.கார்த்திகேயன் தலைமை தாங்கினார். மாவட்ட பொது செயலாளர் குப்பன், மாவட்ட துணை தலைவர் ஜெ.மோகன், நகர துணை தலைவர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இளைஞரணி தலைவர் விநாயகம் வரவேற்று பேசினார். மாநில துணை தலைவர் டாக்டர் இ.எஸ்.எஸ்.ராமன் கலந்து கொண்டு, கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்தார்.மாநில கொள்கை பரப்பு செயலாளர் டி.எம்.வெங்கடேசன், மாவட்ட தலைவர் கும்மிடிப்பூண்டி சேகர், சிவகுமார், பாபு, சதீஷ், துளசிராமன், நெமிலி ஒன்றிய தலைவர் புருஷோத்தமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.