இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

நந்திவரத்தில் முட்புதர்கள் மண்டிய பெண்கள் பள்ளி : மாணவிகள் அவதி

9/5/2025 12:52:31 PM
ஐஎஸ் தீவிரவாதத்தால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் கிடையாது தாயை பார்க்க செல்லும் மகன்கள் போல மத்திய அமைச்சர்கள்-ஆர்எஸ்எஸ் சந்திப்பு: வெங்கய்யா நாயுடு பெருமிதம்

கூடுவாஞ்சேரி: நந்திவரம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் அடர்ந்த காடு போல் நிறைந்துள்ள முட்புதர்களால் அப்பள்ளி மாணவிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். முட்புதர்களை அகற்றி சுத்தம் செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சென்னை, கூடுவாஞ்சேரியை அடுத்த நந்திவரம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் பள்ளி வளாகத்தைச் சுற்றிலும் முட்புதர்கள் நிறைந்துள்ளன.இந்த முள்புதர்களில் ஏராளமான பாம்புகள் உலா வருகின்றன. பாம்பினால் ஏற்படும் ஆபத்தை உணராமல், அப்பகுதியில் மாணவிகள் விளையாடி வருகின்றனர்.இந்நிலையில், பள்ளியை ஒட்டி காந்தி நகர் செல்லும் சாலையோரம் செல்லும் சுற்றுச்சுவர் மீது நேற்று காலை ஊர்ந்து சென்ற 6 அடி நீளம் கொண்ட சாரை பாம்பை அப்பகுதி மக்கள் அடித்து கொன்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பள்ளி வளாகத்தை சுற்றிலும் ஏராளமான அடர்ந்த முட்புதர் காடுகளும் பாம்புகளும் உள்ளன. இதனால் மாணவிகளுக்கு எந்நேரமும் ஆபத்து ஏற்படலாம். மேலும், சுற்றுச்சுவரில் சில சமூகவிரோதிகள் ஏறி பள்ளிக்குள் குதித்து மது குடித்து வருகின்றனர்.மேலும், காந்திநகர் செல்லும் சிமெண்ட் சாலையை ஒட்டிய பள்ளி கட்டிடங்கள் மீது மரக்கிளைகள் சாய்ந்தபடி உள்ளது. இதனால் வகுப்பறைக்குள் பாம்புகள் எப்போது நுழையுமோ என்ற அச்சத்தில் மாணவிகள் உள்ளனர்.இப்பள்ளியில் அடர்ந்து காணப்படும் முட்புதர்களை அகற்றி, அங்கு மாணவிகள் விளையாடுவதற்கும், அவர்கள் கொண்டு வரும் சைக்கிள்களை நிறுத்துவதற்கும் பள்ளி நிர்வாகம் இடத்தை தேர்வு செய்ய, சம்பந்தப்பட்ட கல்வித்துறை உயரதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மேலும் சில
  • 9ல் ஸ்ரீரங்கம் கோயில் கும்பாபிஷேகம்



  • ஆதனூரில் கடன் தொல்லையால் மனைவி மாயம்



  • 200 சுங்கச்சாவடிகளை அகற்ற நடவடிக்கை தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி



  • வேளாங்கண்ணியில் நாளை மறுநாள் பெரிய தேர் பவனி



  • வேலூர் மத்திய சிறையில்செல்போன், போதைப்பொருள் சப்ளை : டாக்டர் மாற்றம்



  • கிருஷ்ண ஜெயந்தி விழாவுக்கு அனுமதி மறுப்பு : கலெக்டர் அலுவலகம் முன்பு இரு சமுதாய மக்கள் முற்றுகை : போலீசார் குவிப்பு



  • அதிமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரிப்பு : விஜயகாந்த் குற்றச்சாட்டு



  • கூடுவாஞ்சேரியில் ரயில் மோதி வாலிபர் பலி



  • நந்திவரம்-கூடுவாஞ்சேரியில் மரக்கன்று நடுவிழா: ஏழை, மாணவர்களுக்கு உதவி



  • தைலாவரத்தில் 20 அடி பள்ளத்தில் பாய்ந்த கார் போதை ஆசாமியால் விபரீதம்



Facebook

Twitter

டாப்ஸியின் புது பாய்பிரண்ட்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]