இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

அதிமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரிப்பு : விஜயகாந்த் குற்றச்சாட்டு

9/5/2025 12:51:51 PM
ஐஎஸ் தீவிரவாதத்தால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் கிடையாது தாயை பார்க்க செல்லும் மகன்கள் போல மத்திய அமைச்சர்கள்-ஆர்எஸ்எஸ் சந்திப்பு: வெங்கய்யா நாயுடு பெருமிதம்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையின் படி, தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் ஏறத்தாழ 190 சதவிகிதம் அதிகரித்திருப்பதாகவும், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை 55 சதவிகிதம் அதிகரித்து, இந்தியாவில் மூன்றாவது இடத்திற்கும், குழந்தைகளை கொலை செய்வதில் நான்காவது இடத்திற்கும் தமிழகம் முன்னேறி இருப்பதாகவும் தெரியவருகிறது. இதுதான் அதிமுக ஆட்சியில் தமிழகத்தின் முன்னேற்றமா? குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் தமிழகத்தில் 2011ஆம் ஆண்டில் 925 ஆக இருந்தது. முதலமைச்சராக ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஆண்டுதோறும் எண்ணிக்கையில் பெருகி தற்போது 2014ஆம் ஆண்டில் 2,354 ஆக உயர்ந்திருப்பது மிகுந்த கவலையளிக்கிறது.

உண்மை நிலை இவ்வாறு இருக்க ஆட்சியாளர்களோ, பொய்யும், புரட்டும் பேசி, குழந்தைகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி இருப்பதைப்போன்ற ஒரு மாய தோற்றத்தை வெற்று அறிவிப்புகள் மூலம் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். எனவே தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தன்னுடைய போக்கை மாற்றிக்கொண்டு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களையும், பாலியல் வன்கொடுமைகளையும் தடுத்து நிறுத்தும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.குறிப்பாக, குற்றங்களை குறைப்பதற்கு, அதிமுக அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். மக்களின் நலன் குறித்து கவலைப்படாமலும் மது விற்பனையின் மூலம் அரசுக்கும், தங்களுக்கும் கிடைக்கும் வருமானம் குறித்து மட்டுமே கவலைப்படும் இந்த அதிமுக ஆட்சிக்கு, உரிய நேரத்தில் தக்க பாடத்தை தமிழக மக்கள் புகட்டுவார்கள் என்பது நிச்சயம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சில
  • 9ல் ஸ்ரீரங்கம் கோயில் கும்பாபிஷேகம்



  • ஆதனூரில் கடன் தொல்லையால் மனைவி மாயம்



  • 200 சுங்கச்சாவடிகளை அகற்ற நடவடிக்கை தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி



  • வேளாங்கண்ணியில் நாளை மறுநாள் பெரிய தேர் பவனி



  • வேலூர் மத்திய சிறையில்செல்போன், போதைப்பொருள் சப்ளை : டாக்டர் மாற்றம்



  • கிருஷ்ண ஜெயந்தி விழாவுக்கு அனுமதி மறுப்பு : கலெக்டர் அலுவலகம் முன்பு இரு சமுதாய மக்கள் முற்றுகை : போலீசார் குவிப்பு



  • நந்திவரத்தில் முட்புதர்கள் மண்டிய பெண்கள் பள்ளி : மாணவிகள் அவதி



  • கூடுவாஞ்சேரியில் ரயில் மோதி வாலிபர் பலி



  • நந்திவரம்-கூடுவாஞ்சேரியில் மரக்கன்று நடுவிழா: ஏழை, மாணவர்களுக்கு உதவி



  • தைலாவரத்தில் 20 அடி பள்ளத்தில் பாய்ந்த கார் போதை ஆசாமியால் விபரீதம்



Facebook

Twitter

டாப்ஸியின் புது பாய்பிரண்ட்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]