ஆவடி அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் பலி
9/5/2025 12:47:35 PM
ஆவடி: ஆவடி அருகே தண்டவாளத்தை ஒரு பெண் கடக்க முயன்றபோது, அவர்மீது ரயில் மோதியதில் பரிதாபமாக பலியானார்.ஆவடியை அடுத்த அண்ணனூர், சிவசக்தி நகர் 52-வது தெருவை சேர்ந்தவர் செங்குட்டுவன். இவரது மனைவி எஸ்தர் (எ) சுசீலா (45).ஆவடி-அண்ணனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே நேற்று முன்தினம் எஸ்தர் தண்டவாளத்தைக் கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக வந்த மின்சார ரெயில் எஸ்தர் மீது வேகமாக மோதியது.இதில் சம்பவ இடத்திலேயே எஸ்தர் ரயிலில் அடிபட்டு, உடல் சிதறி பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆவடி ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், ரயில் தண்டவாளத்தில் சிதைந்து கிடந்த எஸ்தரின் உடலை கைப்பற்றி, சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக ரயில்வே போலீசார் அனுப்பி வைத்தனர்.இப்புகாரின் அடிப்படையில் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.