இளம் ஹீரோவுக்கு சமந்தா வலை
9/4/2025 2:44:27 PM
‘நான் ஈ’ படத்தில் நடித்த சமந்தா இளவட்டங்களை கவர்ந்தார். அடுத்தடுத்து சீனியர் ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். இந்நிலையில் தெலுங்கில் நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யா நடிக்கும் ‘சாஹசமே சுவாசக சகிப்போ’ படத்தின் டீஸர் வெளியானது. இதைப்பார்த்த சமந்தா நாக சைதன்யாவுக்கு கிறங்கடிக்கும் மெசேஜ் வெளியிட்டு கவர்ந்தார். ‘நல்வாழ்த்துக்கள் சைதன்யா... உன் பட டீஸர் பார்த்தேன். 2010ம் ஆண்டு உன்னைப்பார்த்து நிறைய இளம்பெண்கள் மூர்ச்சையானார்கள். அதைவிட அதிகமாக இம்முறை மூர்ச்சையாவார்கள்’ என்று புகழ்ந்திருந்தார். அதைப்பார்த்து குஷியான நாக சைதன்யா,‘நன்றி சமந்தா, நீ மூர்ச்சையாகும் வரை தொடரும்..’ என பதில் அளித்தார். உடனே அதற்கு பதில் சொன்ன சமந்தா,’அதற்கான முயற்சியைகூட இன்னும் நீ எடுக்கவில்லை’ என குறிப்பிட்டிருந்தார். ஏற்கனவே கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘யே மாயா சேஸாவ்’ படத்தில் நாக சைதன்யா, சமந்தா ஜோடியாக நடித்திருந்தனர். புதிய படத்தில் நாக சைதன்னாவுடன் இணைவதற்காக சமந்தா விரித்திருக்கம் வலையே இந்த வலைதளமெசேஜ் என இணையதள வாசிகள் கமென்ட் வெளியிட்டுள்ளனர்.