இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

அமெரிக்க ஓபன் டென்னிஸ்; மூன்றாம் சுற்றில் பெடரர், முர்ரே

9/4/2025 2:35:53 PM
தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய 27.5 டிஎம்சி தண்ணீரை தர கர்நாடகாவுக்கு அறிவுறுத்துங்கள் பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் ராணுவத்தில் ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் மத்திய அரசு இன்று அறிவிப்பு

நியூயார்க்: ரோஜர் பெடரர், ஆண்டி முர்ரே ஆகியோர் அமெரிக்க ஓபன் டென்னிஸில் மூன்றாம் சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.நியூயார்க் நகரில் நடந்து வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இரண்டாம் சுற்று ஆட்டங்கள் நேற்றிரவு நடந்தன. கிராண்ட் ஸ்லாம் ராஜா என்று அழைக்கப்படும் சுவிஸ் வீரர் ரோஜர் பெடரர், இரண்டாம் சுற்றில் பெல்ஜியம் வீரர் ஸ்டீவ் டார்சிஸை எதிர் கொண்டார். அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பெடரர் 6-1, 6-2, 6-1 என நேர் செட்களில் எளிதில் வெற்றி பெற்று மூன்றாம் சுற்றுக்கு முன்னேறினார். ஆர்தர் ஆஷே ஸ்டேடியத்தில் மின்னொளியில் நடந்த  ஆட்டத்தில், 2ம் நிலை வீரரான பெடரருக்கு, 66ம் நிலை வீரரான டார்சிஸை வெல்ல 80 நிமிடங்களே தேவைப்பட்டது. இந்த வாரத்தில் பெடரர் ஆடியுள்ள முதல் 2 சுற்று ஆட்டங்களில் 9 கேம்களை மட்டுமே பெடரர் இழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 17 கிராண்ட் ஸ்லாம் சாம்பியன் பட்டங்களை வென்றுள்ள பெடரர், 2012ம் ஆண்டு விம்பிள்டனில் வெற்றி பெற்ற பின்னர், கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் எதையும் வெல்லவில்லை. 18வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றும் நோக்கத்துடன் அமெரிக்க ஓபனில் அதிரடி காட்டி வரும் பெடரர், மூன்றாம் சுற்றில் ஜெர்மனி வீரர் பிலிப் கோல்ஸ்செரீய்பரை எதிர் கொள்ள உள்ளார்.

3ம் நிலை வீரரான பிரிட்டனின் ஆண்டி முர்ரே, பிரான்ஸ் வீரர் மன்னாரினோவை 2ம் சுற்றில் எதிர் கொண்டார். முர்ரேவின் சர்வீஸ் கேம்களை முறியடித்து முதல் 2 செட்களை வென்று அதிர்ச்சி கொடுத்தார் மன்னாரினோ. இதன் பின்னர் சுதாரித்து ஆடிய முர்ரே, கடைசி மூன்று செட்களையும் கைப்பற்றி ஆட்டத்தில் வெற்றி பெற்றார். ஆண்டி முர்ரே 5-7, 4-6, 6-1, 6-3, 6-1 என ஐந்து செட்களில் போராடி வென்று மூன்றாம் சுற்றுக்குத் தகுதி பெற்றார்.சுவிட்ஜர்லாந்து வீரர் வாவ்ரிங்கா, கொரிய வீரர் ஹியோன் சுங் இடையிலான ஆட்டம் பெரும் போராட்டமாக அமைந்தது. மூன்று செட்களும் டை பிரேக்கருக்குச் சென்றன. வாவ்ரிங்கா 26 ஏஸ் சர்வீஸ்களை வீசிய போதிலும், அவருக்கு கடும் சவாலாகத் திகழ்ந்தார் ஹியோன் சுங். இறுதியில் டை பிரேக்கர் முறையில் மூன்று செட்களையும் கைப்பற்றினார் வாவ்ரிங்கா. 7-6(2), 7-6(4), 7-6(6) என்ற செட்களில் வாவ்ரிங்கா வெற்றி பெற்றார்.பிரபல வீரர்கள் ஜான் இஸ்னர், டொனால்ட் யங் (அமெரிக்கா), டாமிக் (ஆஸி), தாமஸ் பெர்டிச் (செக். குடியரசு), டிராய்கி (செர்பியா) ஆகியோரும் மூன்றாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் 2ம் நிலை வீராங்கனையான ரோமேனியாவின் சிமோனா ஹாலேப், உக்ரேன் வீராங்கனை போண்டரென்கோவை எதிர் கொண்டார். ஹாலேப்பின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறிய போண்டரென்கோ, தனது சர்வீஸ் கேம்களை 2 செட்களிலும் பறி கொடுத்தார். ஹாலேப் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் போண்டரென்கோவை வென்று மூன்றாம் சுற்றுக்குத் தகுதி பெற்றார்.20ம் நிலை வீராங்கனை விக்டோரியா அசரெங்கா (பெலாரஸ்), சமந்தா ஸ்டோசர் (ஆஸி), பெட்ரா குவித்தோவா (செக். குடியரசு), பென்னட்டா, சாரா எர்ரானி (இத்தாலி),  சபைன் லிசிக்கி (ஜெர்மனி), கோன்டா(பிரிட்டன்), பார்தெல் (ஜெர்மனி) ஆகியோரும் மூன்றாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

மேலும் சில
  • அமெரிக்க ஓபன் டென்னிஸ் நான்காம் சுற்றில் செரீனா, ஜோகோவிச்



  • இங்கி.க்கு எதிரான முதல் ஒன் டே ஆஸ்திரேலியா சூப்பர் வெற்றி



  • உடல் ஊனமுற்றோருக்கான டி20 தொடர் இங்கிலாந்து டிரெஸ்சிங் ரூமிற்கு மோர்டசா திடீர் விஜயம்



  • அமெரிக்க ஓபன் டென்னிஸ் செரீனா நடால் முன்னேற்றம்



  • இங்கி. - ஆஸி. இடையே இன்று முதல் ஒன் டே



  • ஆசிய குத்துச்சண்டை போட்டி அரையிறுதியில் சதீஷ்குமார்



  • அமெரிக்க ஓபன் டென்னிஸ் பெடரர், வாவ்ரிங்கா முன்னேற்றம்



  • வெற்றிதான் முதல் இலக்கு - விராட் கோஹ்லி



  • உலக கோப்பையை வென்று தந்தால் சல்மான் பட்டை பாக்., மன்னிக்கும் சோயப் அக்தர் பேட்டி



  • அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஜோகோவிச், செரீனா முன்னேற்றம் : நிஷிகோரி அதிர்ச்சி தோல்வி



Facebook

Twitter

டாப்ஸியின் புது பாய்பிரண்ட்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]