சீனாவின் புஜியான் மாகாணம்
9/4/2025 2:20:22 PM
சீனாவின் புஜியான் மாகாணம், ஜிஞ்சியான் நகரில் தனது 11 மாத குழந்தையுடன் ஒரு பெண் சாலையோரம் நடந்து சென்றார். பின்னர் அந்தக் குழந்தையை கீழே நிறுத்தி, உடையை சரிசெய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு வேன், குழந்தை இருந்த திசையை நோக்கி வேகமாக திரும்பியது. குழந்தை, வேனுக்கு அடியில் சிக்கிக் கொண்டது.வேன் டிரைவரும் வண்டியை நிறுத்திவிட்டார். இதனால் அக்குழந்தை சக்கரத்துக்கு அடியில் சிக்கிக் கொண்டது. இதைக் கண்டதும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக வேனை தூக்கி, லேசான சிராய்ப்பு காயங்களுடன் இருந்த குழந்தையை மீட்டு ஆம்புலன்சில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்குள்ள சிசிடிவி காமிராவில் பதிவாகி இருந்த காட்சிகள் அனைத்தும், தற்போது பல்வேறு இணையதளம் மூலம் மக்களிடையே பரவி, பதட்டத்தை ஏற்படுத்தி வருகிறது.