ஏரி, குளங்கள் நிரம்புவது
9/4/2025 2:19:41 PM
மழை தொடர்ந்து பெய்யும்போது ஏரி, குளங்கள் நிரம்புவது வழக்கம். ஆனால் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள ஒதியம் கிராமத்தில் நேற்று முன்தினம் பெய்த ஒரு நாள் மழைக்கே அங்குள்ள 4 ஏரிகள் நிரம்பி வருவதை பார்த்து அந்த பகுதி மக்கள் ஆச்சர்யமடைந்துள்ளனர். காரணம் அன்று இரவு அந்த பகுதியில் பலத்த இடி மின்னலுடன் மழை பெய்தபோது, நீர் இடி விழுந்ததாம். இதனால் நிலத்துக்கு அடியில் இருந்து குமிழ் குமிழாக பெருக்கெடுத்து அந்த பகுதியில் உள்ள சுத்துக்குளம், வட்டக்குளம், கசிவுநீர் குட்டை, இழுகாட்டு ஏரி ஆகியவற்றில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. சுற்றுப்புற கிராம மக்கள் இந்த ஏரி குளங்களை ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.